![]() | 2022 January ஜனவரி மாத குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
ஜென்ம குரு உங்கள் உறவில் கசப்பான அனுபவத்தை உருவாக்குவார். சனி உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் உங்களுக்கு இருக்கும் குடும்ப பிரச்சனைகளால் உங்கள் மன அமைதியை இழக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் பிற குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு கடுமையான சண்டைகள் ஏற்படலாம். குடும்பத்தில் அரசியல் அதிகமாக இருக்கும். யாராவது மூன்றாவது நபரை நீங்கள் உள்ளே அனுமதித்தால் அவர் ஜனவரி 15, 2022 க்கு மேல் உங்கள் பிரச்ச்னைகளை மேலும் மோசமாக்கிவிடலாம்.
முடிந்த வரை உங்கள் சொந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை யாரிடமும் பகிர்வதை தவிர்த்து விடுங்கள். ஜனவரி 26, 2022 க்கு பிறகு விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கலாம். இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். சுப காரியங்கள் நிகழ்த்த ஏற்ற நேரமாக இந்த மாதம் இல்லை. அடுத்த ஒரு சில மாதங்களுக்கு நீங்கள் அவமானப்படும் சூழல் உங்களுக்கு ஏற்படலாம்.
நீங்கள் ஏப்ரல் 2022 வரை காத்திருந்து அதன் பின்னரே முக்கிய முடிவுகளை எடுக்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிய நேரலாம். இந்த மாதம் உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
Prev Topic
Next Topic