2022 January ஜனவரி மாத வேலை மற்றும் உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி)

வேலை மற்றும் உத்தியோகம்


உங்கள் தொழில் வளர்ச்சிக்கு இந்த மாதம் சிறப்பான காலகட்டமாக இருக்கும். புதிய வேலைகளுக்கு விண்ணப்பிதிருந்தால் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கும் இது சிறப்பான நேரமாக உள்ளது. ஜனவரி 16, 2022 முதல் ஜனவரோ 29, 2022 வரை உள்ள காலகட்டத்தி உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல வேலை நலல் பதவி மற்றும் சம்பளம் போன்ற விடயங்களுக்கு நீங்கள் முயற்சிக்க இது ஏற்ற நேரமாக உள்ளது. மேலும் புதிய நிறுவனத்தில் சேர உங்கள் பின்னணி சரிபார்ப்பு செயல்முறைகளில் சில தாமதங்கள் ஏற்படலாம். ஆனால் நீங்கள் அதில் வெற்றிப்பெற்றுவிடுவீர்கள்.
உங்களின் உத்தியோக அழுத்தமும், பதற்றமும் குறையும். அலுவலகத்தில் அரசியல் இருக்காது. உங்கள் அலுவலகத்தில் நீங்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாகக் காத்திருந்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் இப்போது உங்களுக்கு கிடைக்கும். மொத்தத்தில் இந்த மாதம் உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் சரியான பாதையில் பயணித்து சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள்.
நீங்கள் உங்கள் ஒப்பந்தம் ரீதியாக அல்லது தற்காலிகமாக வேலை பார்ப்பவராக இருந்தால், அதில் நீங்கள் முழுநேர உத்தியோகமாக மாற்றம் பெறுவீர்கள். உங்கள் நிறுவனத்தில் இருந்து வேலை இடமாற்றம், குடியேற்றம் போன்ற பலன்களுக்கு ஒப்புதல் கிடைக்கும். உங்கள் விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு உங்களைச் சுற்றியுள்ளவர்கள் பொறாமைப்படுவார்கள். உங்கள் கர்மக் கணக்கில் நற்செயல்களைக் குவிக்க சில நற்காரியங்களைச் செய்ய நீங்கள் முயற்சிக்கலாம்.






Prev Topic

Next Topic