2022 July ஜூலை மாத தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


சனி பகவான் மற்றும் சுக்கிரன் உங்களுக்கு இருக்கும் நிதி தேவைகளை சமாளிக்க போதிய பண வரத்தை ஏற்படுத்துவார். ஆனால் போட்டியாளர்களிடம் இருந்து உங்களுக்கு கடுமையான அழுத்தம் ஏற்படலாம். நீங்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே உங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். உங்கள் வணிகத்தில் நீங்கள் ஓரளவு நல்ல முன்னேற்றத்தையும் வெற்றியையும் பெறுவீர்கள். ஆனால் கடுமையான உழைப்பின் காரணமாக உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம்.
வங்கிக் கடன் அல்லது தனியாரிடம் இருந்து உங்களுக்கு பணம் கடனாக கிடைக்கும். நீங்கள் இந்த மாதத்தின் முதல் பாதியில் புதிய ப்ரோஜெக்ட்டை தொடங்குவீர்கள். உங்கள் நில உரிமையாளர்கள், வாடகைக்கு இருப்பவர்கள் அல்லது வணிக பங்குதாரர்களுடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். ரியல் எஸ்டேட் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் இந்த மாதம் சிறப்பாக செயல்படுவார்கள்.


Prev Topic

Next Topic