![]() | 2022 July ஜூலை மாத உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | உடல்நலம் |
உடல்நலம்
உங்கள் உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உங்களுக்கு சளி, ஒவ்வாமை மற்றும் சுரம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ராகு மற்றும் செவ்வாய் இணைந்து உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மனக் கவலை மற்றும் பதற்றத்தை ஏற்படுத்துவார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் மன ரீதியாகவும் பாதிக்கப்படலாம். ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகத் தவறாதீர்கள்.
உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம். நீங்கள் மருத்துவ செலவுகளுக்காகே பெரும் அளவு பணத்தை செலவு செய்ய நேரலாம். ஹனுமான் சாலிசா மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் உங்குக்கு இருக்கும் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். ஜூலை 29, 2022 க்கு பிறகு அடுத்த இரண்டரை மாதங்களுக்கு சற்று ஆறுதலான சூழல் ஏற்படும்.
Prev Topic
Next Topic