![]() | 2022 March மார்ச் மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
இந்த மாதம் நீங்கள் கடுமையான சூழலையும் அதிக வேலை பளுவையும் சந்திப்பீர்கள். உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் கிரகங்கள் இணைந்து சஞ்சரிப்பதால், இந்த மாதத்தின் முதல் வாரம் உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படலாம். மார்ச் 1௦, 2022 முதல் விடயங்கள் இலகுவாகும். ஆனாலும், நீங்கள் கடுமையான வேலை பளுவில் இருப்பீர்கள். ஆனாலும், உங்கள் உத்தியோகத்தில் நீங்கள் விண்ணைத்தொடும் வளர்ச்சியை காண்பீர்கள்.
மேலும் நல்ல சம்பளத்துடன் நீங்கள் அடுத்த நிலைக்கு பதவி உயர்வையும் பெறுவீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் மேலாளராகும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் இடமாற்றம், மற்றும் குடியேற்றம் போன்ற பலன்களும் உங்களுக்கு ஒப்புதல் பெரும். மேலும் புது வாய்ப்புகளைப் பெற முயற்சிக்கவும் இது ஏற்ற நேரம். உங்கள் ஒப்பந்தம் ரீதியான உத்தியோகமும் முழு நேரமாக மாற்றப்படும்.
Prev Topic
Next Topic