![]() | 2022 March மார்ச் மாத உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | உடல்நலம் |
உடல்நலம்
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஐந்து கிரகங்கள் உங்கள் ராசியின் 8 ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிகின்றனர். உங்களுக்கு இதனால் கடுமையான அழுத்தமும் பதற்றமும் ஏற்படலாம். உங்கள் உடல் நலம் இந்த மாதத்தின் முதல் சில நாட்கள் பாதிக்கப்படலாம். ஆனால், மார்ச் 6, 2022 முதல் நீங்கள் நல்ல முன்னேற்றத்தை உங்கள் உடல்நலத்தில் காண்பீர்கள். குரு உங்களுக்கு சரியான மருந்து மற்றும் சிகிச்சை கிடைக்கப்பெற்று விரைவாக குணமடைய உதவி செய்வார்.
உடற் பயிற்சி செய்யும் போதும், விளையாட்டில் இருக்கும் போதும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலமும் சற்று பாதிக்கப்படலாம். உங்கள் குடும்பத்தினர்களுக்கு போதிய மருத்துவ காப்பீடு உள்ளதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஹனுமான் சாலிசா மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
Prev Topic
Next Topic