![]() | 2022 March மார்ச் மாத காதல் ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | காதல் |
காதல்
உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் பொற்காலத்தை காண்பீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், ஒரு புதிய உறவைத் தொடங்க இது நல்ல நேரம். இந்த மாதம் நீங்கள் காதலிப்பீர்கள். அடுத்து வரவிருக்கும் சில ஆண்டுகளுக்கு உங்களுக்கு இத்தகைய நல்ல வாய்ப்புகள் கிடைப்பது குறைவே என்பதால் இப்போது நீங்கள் திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள்.
திருமணம் ஆன தம்பதியினர் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பார்கள், நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான வாய்ப்புகளை இயற்கையாகவே பெறுவார்கள். நீங்கள் IVF மற்றும் IUI போன்ற சிகிச்சை செய்து கொண்டாலும் அது உங்களுக்கு நல்லப் பலனைத் தரும். இந்த மாதம் நீங்கள் நல்ல செய்திகள் பலவற்றைப் பெறுவீர்கள்.
உங்களால் நேர்மறைப் பலன்களை காண முடியவில்லை என்றால், உங்கள் பிறந்த சாதகத்தை பார்க்கவும். ஒரு சோதிடரை அணுகி உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைப் பெறுவதற்கான ஆலோசனையைப் பெற முயற்சி செய்யுங்கள்.
சிறப்பு குறிப்பு: உங்களுக்கு ஏப்ரல் 15, 2022 வரை கிடைத்துள்ள இந்த நேரத்தை நீங்கள் தவறவிட்டால், அதன் பிறகு நீங்கள் மே 2023 வரை காத்திருந்து பிறகு தான் திருமண முயற்சிககளை செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic