2022 October அக்டோபர் மாத உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

உடல்நலம்


சனி பகவான், ராகு மற்றும் சுக்கிரன் இந்த மாதம் உங்கள் உடல்நலத்தை பாதிக்கக்கூடும். உங்கள் வாழ்க்கைத்துணை, உறவினர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உடல்நலமும் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். இந்த மாதம் அறுவைசிகிச்சை செய்து கொள்வதை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் விளையாட்டு அல்லது வெளிப்புற செயல்களில் ஈடுபடும் போது உங்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்துவிட்டு போதிய ஓய்வு எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அக்டோபர் 26, 2022 வாக்கில் உங்களுக்கு சாதகமற்ற செய்திகள் வரலாம். ஞாயிறு தோறும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். யோக, தியானம் மற்றும் கடவுள் வழிபாடு செய்வதால் சற்று ஆரோக்கியமாக இருக்கும். நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க தினமும் ஹனுமான் சாலிசா மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்க முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic