2022 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி)

கண்ணோட்டம்


அக்டோபர் 2022 சிம்ம ராசி பலன்கள் (Leo Moon Sign). சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3 ஆம் வீட்டிற்கு அக்டோபர் 16, 2022 க்கு பிறகு பெயர்ச்சி ஆவதால் நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். புதன் உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான பலன்களை இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களுக்குத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து அக்டோபர் 16, 2022 முதல் அக்டோபர் 31, 2022 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பண வரத்தை அதிகரிப்பார்.
கேது உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றியை அதிகரிப்பார். ராகு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் எந்த பிரச்சனைகளும் இருக்காது. குரு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவதால் நல்ல பலனைப் பெறுவீர்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்.


அக்டோபர் 17, 2022 முதல் நவம்பர் 23, 2022 வரையிலான 5 வாரக் காலங்கள் உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். எனவே, இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள்.
குறிப்பு: நவம்பர் 23, 2022 முதல் ஏப்ரல் 21, 2023 வரை நீங்கள் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.


Prev Topic

Next Topic