2022 September செப்டம்பர் மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி)

வேலை / உத்தியோகம்


சனி பகவான் உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த நிலையிலும் குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த நிலையிலும் நீங்கள் உங்கள் உத்தியோகம் சார்ந்த விடயங்களில் நல்ல பலனையும் வளர்ச்சியையும் பெறுவீர்கள். உங்கள் வேலை பளு மற்றும் அலுவலகத்தில் நடக்கும் அரசியல் குறையும். நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ப்ரோஜெக்ட்டை சரியான நேரத்தில் முடித்துவிடுவீர்கள். உங்கள் முதலாளி மற்றும் உயர்நிலையில் இருக்கும் ஊழியர்களிடம் இருந்து நல்ல பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களுக்கு கிடைக்கும் போனஸ் மற்றும் ஊக்கத்தொகைகளால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்ட்டம் அடுத்த 6 வாரங்களுக்கு மட்டுமே இருக்கும் என்பதால் நீங்கள் இப்போது உங்கள் உத்தியோகத்தை மாற்ற முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்காது. எனவே தற்போது இருக்கும் அலுவலகத்திலேயே நீங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற முயற்சிப்பதும் உங்களுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களுடன் நல்ல உறவை வளர்க்க முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும்.


அடுத்த 6 வாரங்களுக்கு பிறகு, அதாவது அக்டோபர் 18, 2022 க்கு மேல் நீங்கள் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நவம்பர் அல்லது டிசம்பர் 2022 வாக்கில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கவும் நேரலாம். எனவே, இந்த மாதம் உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை மாற்ற முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்காது.


Prev Topic

Next Topic