![]() | சனி பெயர்ச்சி (2017 - 2020) பலன்கள் (Sani Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சனி பகவான் கடந்த இரண்டறை ஆண்டுகளாக உங்களது ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பல அதிர்ஷ்டம் மிக்க விசயங்களை தந்திருப்பார். குரு பகவான் உங்களது ராசியில் கடந்த ஆகஸ்ட் 2015 முதல் உங்களது வளர்ச்சியை பாதித்திருந்திருப்பார். எனினும் 2016 முதல் நீங்கள் வளர்ச்சியை கண்டிருப்பீர்கள். மேலும் உங்களது குடும்ப வாழ்க்கை, உத்தியோகம் மற்றும் நிதி ஆகியவற்றில் ஓரளவிர்க்காயினும் நிலை பெற்றிருந்திருப்பீர்கள்.
தற்போது உங்களுக்கு ஏழரை சனி வரும் அக்டோபர் 25, 2017 முதல் ஆரம்பிக்க உள்ளது. இது ஏழரை ஆண்டு காலம் நீடிக்கும். எனினும் இந்த ஏழரை ஆண்டுகள் உங்களுக்கு எந்த ஒரு வளர்ச்சியும் முன்னேற்றமும் அல்லது அதிர்ஷ்டமும் இருக்காது என்று சொல்ல முடியாது. கண்டிப்பாக உங்களது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் இருக்கும். இருப்பினும் இந்த ஏழரை ஆண்டு காலத்தில் குறைந்தது மூன்று ஆண்டுகள் உங்களுக்கு சோதனை நிறைந்த காலமாக இருக்கும். அடுத்த இரண்டரை ஆண்டுகள் மிதமான வளர்ச்சியும் வெற்றியையும் நீங்கள் காண்பீர்கள். எனினும் மனதளவில் சற்று சோர்ந்து காணப் படுவீர்கள். சிவனை வணங்குவதால் உங்களது மனோ பலம் அதிகரித்து சற்று தெம்போடு இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic