குரு பெயர்ச்சி (2017 - 2018) தொழில் மற்றும் வேற்று வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

தொழில் மற்றும் வேற்று வருமானம்


தொழிலதிபர்களுக்கு கடந்த ஒரு வருடம் மோசமான காலமாக இருந்திருக்கும். குரு 8ஆம் வீட்டிலும் சனி 10ஆம் வீட்டிலும் உங்களது வாழ்க்கையில் பல இன்னல்களை கொடுத்திருப்பார்கள். நீங்கள் தொடர்ந்து தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சாதித்து வந்திருப்பீர்கள். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்ததால் நீங்கள் கடன் தொல்லையிலும் சிக்கியிருந்திருப்பீர்கள். மறைமுக எதிரிகளால் நீங்கள் மேலும் இன்னல்களுக்கு ஆளாகி இருந்திருப்பீர்கள்.
எனினும் தற்போது நிகழும் குரு பெயர்ச்சி உங்களது அனைத்து சோதனைகளையும் ஒரு முடிவுக்கு கொண்டு வர உள்ளது. இந்த பெயர்ச்சி காலத்தின் முதல் 2 மாதங்கள் உங்களது கடந்த கால பிரச்சனைகளை சரி செய்ய உள்ளது. அதன் பின் நீங்கள் பல நல்ல முயற்சிகளும் யோசனைகளும் கொண்டு உங்களது தொழிலில் முன்னேறுவீர்கள். உங்களது புது யோசனையால் நீங்க சந்தையில் ஒரு இடம் பிடிக்கலாம். உங்களுக்கு மேலும் புது ப்ரொஜெக்ட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது உங்களது தொழில் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருந்து உங்களை முன்னேற்றிவிடும்.


உங்களுக்கு வருமானம் மற்றும் நிதி பல வழிகளில் வர உள்ளது. வெளி நாட்டில் இருந்தும் உங்களுக்கு பண வரவு கிடைக்கும். உங்களுக்கு புது முதலீட்டாளர்களிடம் இருந்து தேவையான நிதி உதவி கிடைக்கும். மேலும் எதிர் பார்த்த படி வங்கி கடனும் கிடைக்கும். புது முயற்சியில் ஈடுபட இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் புதிதாக தொழில் தொடங்க முயற்சிக்கின்றீர்கள் என்றால் அதற்க்கு இது தக்க காலமாகும். சுய தொழில் புரிவோர், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிஷன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளுக்கு இது ஓர் பொற்காலமாகும்.



Prev Topic

Next Topic