![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) நிதி/ பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | நிதி/ பணம் |
நிதி/ பணம்
கடந்த ஒரு ஆண்டாக குரு, சனி மற்றும் ராகு கேது உங்களது நிதி நிலையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையிலேயே கடந்த ஆண்டு மிகவும் மோசமாதாக இருந்திருக்கும். உங்களது கடன் பெரிய அளவு உயர்த்திருக்கும். அது உங்களை கட்டாயம் பாதித்திருந்திருக்கும். மேலும் உங்களது வங்கி கணக்கும் திவால் ஆகி இருந்திருக்கும்.
அடுத்த ஒரு வருடத்திற்கு குரு, சனி, மற்றும் ராகு உங்களது ராசிக்கு நல்ல இடத்தில் சஞ்சாரம் செய்கின்றனர். இந்த நல்ல நிலை உங்களது அணைத்து கடன்களையும் விரைந்து நீங்கள் அடைக்க உதவும். மேலும் நீங்கள் ஏதேனும் தொழில் நிமித்தமாக அல்லது வேறு செலவுகளுக்காக வங்கியில் கடன் வேண்டினாள் அது எளிதாக கிடைக்கும்.
உங்களுக்கு பல வழிகளில் இருந்து பணம் வரும். உங்களது வருமானமும் புது வேலையால் அல்லது பதவி உயர்வால் அதிகரிக்கும். தேவை அற்ற செலவுகள் குறையும். உங்களது கடன்களை நீங்கள் விரைவாக அடைப்பீர்கள். மேலும் இதனை நாட்கள் உங்களுக்கு இருந்த நிதி பிரச்சனைகள் தற்போது படிப் படியாக குறையும். உங்களது ஜென்ம ஜாதகம் நன்றாக இருந்தால் நீங்கள் விரைவாக இந்த கடன் தொல்லைகளில் இருந்து வெளி வருவீர்கள்.
உங்களது கடன் மதிப்பு உயரும். மேலும் புது கடன் கிடைப்பதற்கு உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகும். உங்களுடைய சேமிப்பு அதிகமாகும். இது உங்களை மகிழ்விக்கும். மேலும் நீங்கள் வரும் செப்டம்பர் 2018 வாக்கில் வீடு அல்லது மனை வாங்க முயற்சிக்கலாம். உங்களது முயற்சி கை கூடி வரும்.
Prev Topic
Next Topic