குரு பெயர்ச்சி (2017 - 2018) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

Sep 11, 2017 to Oct 25, 2017 குறிப்பிடத்தக்க முனேற்றம் (70 / 100)


அஷ்டம குருவில் இருந்து நீங்கள் மீண்டு வந்துள்ளீர்கள். குரு தற்போது உங்களது ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு அமோகமான பலன்களை தர உள்ளது. சந்தேகம் இன்றி உங்களுக்கு பல அதிர்ஷ்டங்கள் வந்து உங்களை மகிழ்விக்கும். கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் பல சோதனைகளை கடந்து வந்திருப்ப்பீர்கள். எனினும் உங்களது ஜென்ம ஜாதகத்தை பொறுத்து உங்களது ராசிக்கு குரு பெயர்ச்சியின் பலன்கள் மாறுபடும். மேலும் உங்களது முனேற்றமும் அதற்கேர்பாற்போல் இருக்கும். எனினுன், இந்த குரு பெயர்ச்சி நிச்சயம் உங்களுக்கு பல நல்ல பலன்களை கொண்டு வரும். இந்த 6 வார காலத்தை நீங்கள் உங்களது கடந்த காலத்தை அசை போட்டுக் கொண்டு வரும் காலத்திற்க்கான முன்னேற்ற திட்டங்களை நோக்கி முயற்ச்சிக்கலாம்.
குருவின் பலத்தால் இது நாள் வரை உங்களுக்கு இருந்த உடல் நல பிரச்சனைகள் இபொழுது மெதுவாக குணமடையத் தொடங்கும். உங்களுக்கு தக்க மருத்துவம் கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். உங்களது குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனைகளும் இனி இருக்காது. நீங்கள் உங்களது குடும்பத்தினர்களோடு மனம் விட்டு பேசி பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்பீர்கள். ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருக்கும் எனில், அதற்க்கான தீர்ப்பு இபொழுது வரும். அது உங்களுக்கு சாதகமாக இருக்குமோ இல்லையோ, நிச்சயம் ஒரு புது தொடக்கத்திற்கான வழியாக இருக்கும். குடும்பத்தில் ஏதேனும் சுப காரியங்கள் நடத்த எண்ணினால் அதனை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடுவது நல்லது. மேலும் அடுத்த 6 வாரங்கள் கழித்து நீங்கள் சுப காரியங்கள் நடத்துவது மற்றும் திருமனத்திர்க்கான முயற்ச்சியில் இடுபடுவது போன்ற விசயங்களை செய்யலாம். நீங்கள் உங்களது குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கின்றீர்கள் என்றால், விரைவாக அவர்களிடம் ஒன்று சேருவீர்கள். இது உங்களை மகிழ்விக்கும்.
உங்களது அலுவலகத்தில் ஒரு கலவையான சூழல் நிலவும். எனினும் அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் கண்டிப்பாக உங்களுக்கு நீண்ட காலத்தில் நல்ல வளர்ச்சியை தரும். ஒருவேலை நீங்கள் உங்களது உத்தியோகத்தை விட நேர்ந்தாலும் கண்டிப்பாக உங்களுக்கு வேறு ஒரு உத்தியோகம் அதிக சம்பளத்திலும் நல்ல பதவியிலும் கிடைக்கும். அதனால் அதனை எண்ணி வறுத்த பட வேண்டாம். நீங்கள் வேறு வேலைக்கு முயற்ச்சிக்க இது ஏற்ற காலகட்டமாகும்.


தொழிலதிபர்களுக்கு பல நல்ல திட்டங்களை சிந்தித்து செயல் படுத்த இது ஏற்ற காலகட்டமாகும். மேலும் நீங்கள் புதிதாக தொழில் தொடங்க நினைத்தால் ஆதரிக்கு இது ஏற்ற காலகட்டமாகும். உங்களது தொழிலை தொடங்குவதற்கு நீங்கள் எண்ணிய படியே வங்கிக் கடனும் கிடைக்கும். உங்களது பண வரத்து அதிகரிப்பதால் நிதி பிரச்சனைகள் குறையும்.
இந்த குரு பெயர்ச்சியின் முதலாம் பாகம் உங்களது நிதி நிலையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும். நீங்கள் கடன் மறு பரிசீலனை மூல்வமாக வட்டி விகிதத்தை குறைக்கலாம், மேலும் இது உங்களுக்கு விரைவாக கடனை அடைப்பதற்கு உதவும். இதனால் உங்களது நிதி பிரச்சனைகள் குறையும். முடிந்த அளவிற்க்கு பங்கு சந்தை முதலீட்டை தவிர்க்கவும். அது உங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தலாம். மேலும் ரியல் எஸ்டேட் மற்றும் வேறு விதமான முதலீடுகள் செய்வதை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.



Prev Topic

Next Topic