குரு பெயர்ச்சி (2017 - 2018) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

Jul 10, 2018 to Oct 11, 2018 பொற்காலம் (90 / 100)


குரு பெயர்ச்சியின் இந்த நான்காம் பாக காலகட்டம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். முக்கிய கிரகங்களான குரு, சனி, ராகு மற்றும் கேது உங்களது ராசியில் நல்ல நிலையில் சஞ்சரிகின்றனர். இதனால் உங்களுக்கு பல அதிர்ஷ்டமிக்க விடைகள் நடக்க மற்றும் கிடைக்க உள்ளது. நீங்கள் இது நாள் வரை கொடுத்த கடின உழைப்பிற்கான பலன்களை தற்போது பெற உள்ளீர்கள். உங்களது கடின உழைப்பிற்கான வெற்றியை இபொழுது அடைவீர்கள். உங்களது உடல் நலம் சீராக இருக்கும். மேலும் குடும்பத்தில் நல்ல சூழல் நிலவும்.
இந்த நான்காம் பாக காலகட்டம் திருமணத்திற்கு ஏற்ற காலகட்டமாகும். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர்களுக்கு அதற்க்கான பாக்கியம் இப்பொழுது கிடைக்கும். காதலர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சி மிக்க காலமாகும். நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால் உங்களது விருப்பத்தை கூறுவதற்கு இது ஏற்ற காலமாகு. அவர் உங்களது விருப்பத்தை ஏற்பார். அது உங்களை வின் அளவு மகிழ்ச்சிக்கு கொண்டு செல்லும். மேலும் திருமணம் ஆகாதவர்களுக்கு தக்க வரன் பார்ப்பதற்கு இது ஏற்ற காலகட்டமாகும். உங்களது வீட்டில் நீங்கள் சுப காரியம் செய்ய இது ஏற்ற காலமாகும். உங்களது குடும்பத்திற்கு சமுதாயத்தில் நல்ல பேரும் புகழும் கிடைக்கும். மேலும் உல்லாச பயணம் மேற்கொள்ள இது சாதகமான காலமாகும். அத்தகைய பயணம் உங்களை மகிழ்விக்கும்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் அடுத்த நிலைக்க பதவி உயர்வு செய்யப்படுவீர்கள். மேலும் உங்களுக்கு சன்மானமும், போனசும் கிடைக்கும். நீங்கள் புதிதாக வேலைக்கு அல்லது வேலை மாற்றத்திற்கு முயர்ச்சிகின்றீர்கள் என்றால் அதற்க்கான சமயம் இது. நீங்கள் எதிர் பார்த்த படி பெரிய கம்பனிகளில் இருந்து நல்ல பதவியில் உங்களுக்கு வேலை கிடைக்கும். நீங்கள் தற்காலிகமாக பனி புரிபவராக இருந்தால் அது நிரந்தரமாக இந்த காலகட்டம் உங்களுக்கு வழி வகுக்கும். மேலும் அரசு வேலைக்கும் நீங்கள் முயற்ச்சிக்கலாம்.
தொழிலதிபர்களுக்கு ஒரு அதிர்ஷ்ட்டம் மிகுந்த காலகட்டமாகும். உங்களது லாபம் அதிகரிக்கும். மேலும் உங்களது லாபத்தை நீங்கள் தொழில் வளர்ச்சிக்கும் சொந்த தேவை அல்லது சேமிப்புக்கும் பகிர்ந்து உபயோகிப்பதனால் உங்களது எதிர் கால பணத் தேவைகள் நல்லபடியாக பூர்த்தி அடையும். பண வரத்து தேவைக்கு அதிகமாகவே இருக்கும். அதனால் நீங்கள் அதனை நல்ல முறையில் முதலீடு செய்வது பாதுகாப்பாகவும் லாபகரமாகவும் இருக்கும். சுய வேலையில் இருப்பவர்களுக்கும் கமிஷன் எஜென்ட்டுகளுக்கும் இது ஒரு பொற்காலம். நீங்கள் எதிர் பார்த்த கமிஷன் உங்களுக்கு கிடைக்கும். இதனால் வருமானம் அதிகரிக்கும்.


நீங்கள் இது நாள் வரை உங்களுக்கு இருந்த பணப் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளித்து கடன்களை அடைப்பீர்கள். உங்களது சேமிப்பு அதிகரிக்கும். மேலும் புது வீடு வாங்குவதற்கும் புது மனையில் குடி ஏருவதர்க்கும் இது ஏற்ற காலகட்டமாகும். ஊக வர்த்தகம் செய்வதற்கு இது ஏற்ற காலகட்டம். நீங்கள் நல்ல லாபத்தை பங்கு சந்தை முதலீட்டில் காண்பீர்கள். மேலும் நீங்கள் ரியல் ஈஸ்டேட்டில் முதலீடு செய்யலாம். அது உங்களுக்கு லாபகரமாக இருக்கும். மேலும் தங்க நகைகள் வாங்குவது அல்லது தங்கத்தில் முதலீடு செய்வது சாதகமாக இருக்கும்.

Prev Topic

Next Topic