குரு பெயர்ச்சி (2017 - 2018) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

காதல்


கடந்த ஆண்டு குரு உங்களது 8ஆம் வீட்டில் இருந்து உங்களது காதல் வாழ்க்கையில் பல இன்னல்களை ஏற்படுத்தி இருக்க கூடும். உங்கள் மீது எந்த ஒரு குற்றமும் இல்லை என்றாலும் உங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் அவமானப் பட்டிருந்திருப்பீர்கள். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்திருந்தால் நீங்கள் விரும்பியவரிடம் இருந்து நீங்கள் பிரிந்திருக்க கூடும். அல்லது உங்களது திருமண முயற்சி தடை பட்டிருந்திருக்கும். மொத்தத்தில் நீங்கள் கடந்த ஒரு ஆண்டுகளாக முக்கிய கிரகமான குரு நல்ல இடத்தில சஞ்சரிக்காததால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகி இருந்திருப்பீர்கள்.
எனினும் குரு தற்போது 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கடினமான காலகட்டத்தில் இருந்து தற்போது வெளி வருவீர்கள். நீங்கள் விரும்புபவரிடம் இருந்த அணைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய முயற்சிப்பீர்கள். அப்படி அது முடியவில்லை என்றால் உங்களுக்கு புதிதாக உறவு கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியோடும் அன்னியூனியத்தோடும் வாழ இது ஏற்ற காலகட்டமாகும். நீண்ட காலமாக குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு தற்போது குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு மருத்துவத்தின் உதவியால் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.


திருமணம் ஆகாதவர்கள் இந்த குரு பெயர்ச்சியால் காதலில் விழ வாய்ப்புள்ளது. நீங்கள் விரும்பியவரிடம் உங்களது காதலை கூற இது ஏற்ற காலமாகும். உங்களுக்கு இது ஒரு பொற்காலமாகும். உங்களது பெற்றோர்கள் உங்களது காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள். மேலும் நீங்கள் உங்களது மனைவி / கணவனுடன் உல்லாச பயணம் செல்வீர்கள்.


Prev Topic

Next Topic