குரு பெயர்ச்சி (2017 - 2018) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


அஸ்தம குருவில் இருந்து வெளி வர உள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
கடந்த ஒரு வருடமாக நீங்கள் பல வலி மிகுந்த விசயங்களை சந்தித்திருந்துருப்பீர்கள். குரு, சனி, ராகு மற்றும் கேது உங்களது ராசியில் சரியான நிலையில் இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளில் நீங்கள் அதிக வலிகளையும், பிரச்சனைகளையும், இன்னல்களையும் கடந்து வந்துருப்பீர்கள். உங்களது வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்ற சொல்லலாம். மேலும் மன ரீதியாக நீங்கள் அதிகம் பாதிக்க பட்டிருப்பீர்கள்.



ஆனால் குரு பகவான் தற்போது உங்களது ராசிக்கு அஸ்தம ஸ்தானத்தில் இருந்து பாக்ய ஸ்தானத்திற்கு வரும் செப்டம்பர் 11, 2017 அன்று பெயர இருக்கிறார். குரு உங்களது ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அடுத்த ஒரு வருடத்திற்கு பல பெரிய அதிர்ஷ்டங்களை தரும். மேலும் வரும் அக்டோபர் 25, 2017 அன்று நிகழவிருக்கும் சனி பெயர்ச்சியும் உங்களுக்கு நன்மைகளையே கொண்டு வரும். அதனால் நீங்கள் இத்தனை நாட்கள் அனுபவித்து வந்த இன்னல்கள், உடல் நல பிரச்சனைகள் மற்றும் அணைத்து சிக்கல்களிலும் இருந்து விடுபட உள்ளீர்கள்.


உங்களது உத்யோகத்தில் நீங்கள் பெரிய அளவில் முன்னேற்றத்தை காண்பீர்கள். பண பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். மேலும் உங்களது குடும்பத்தினரோடு நல்ல உறவு நிலையில் இரூபிப்பீர்கள். மொத்தத்தில் அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த காலகாட்டத்தையே காண்பீர்கள். பல முன்னேற்றங்கள் உங்களை தேடி வரும்.

Prev Topic

Next Topic