குரு பெயர்ச்சி (2017 - 2018) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

Oct 25, 2017 to Mar 09, 2018 வளர்ச்சி மற்றும் வெற்றி (85 / 100)


இந்த குருபெயர்ச்சியின் இரண்டாம் பாக காலகட்டத்தில், சனி உங்களது ராசியின் லாப ஸ்தானத்திற்கு செல்கிறார். ராகுவும் குருவும் உங்களது ராசியில் நல்ல இடந்தில் சஞ்சரிக்கின்றனர். இந்த மூன்று முக்கிய கிரகங்களின் நல்ல நிலை பாடுகள் உங்களுக்கு வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வர உள்ளது. நீங்கள் இது நாள் வரை அவதிப் பட்டு வந்திருந்த உடல் உபாதைகளில் இருந்து தற்போது மீண்டு வருவீர்கள். நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். உங்களது மருத்துவ செலவுகள் குறையும்.
உங்களது மனைவி / கணவன் உங்களது சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டு உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்க இது தகுந்த காலகட்டமாகும். மேலும் உங்களது மகன் அல்லது மகள் யாரையேனும் விரும்புகிறார்கள் என்றால், நீங்கள் அவர்களது விருப்பதிற்கேற்ப திருமணம் செய்து வைப்பீர்கள். மேலும் வீட்டில் சுப காரியங்களை நல்லபடியாக செய்வர்கள். காதலர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்றே கூறலாம். கும்ப ராசி பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஆச்சரியத்தக்க விதத்தில் நீங்கள் விரும்புபவர் அவரது விருப்பத்தை உங்களிடத்தில் கூறுவார். மேலும் உங்களது விருப்பம் நல்லபடியாக திருமணத்தில் முடியும். குரு பெயர்ச்சியின் இந்த இரண்டாம் பாக காலகட்டம் திருமண முயற்ச்சிகளுக்கு ஏற்றதாகும். உங்களது குழந்தைகள் உங்களது பேச்சை கேட்பார்கள். மேலும் அவர்கள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள்.
நீங்கள் புதிதாக வேலை தேடுபவராக இருந்தால் அல்லது வேலையில் மாற்றத்தை எதிர் பார்க்கின்றீர்கள் என்றால் அதற்க்கான முயற்ச்சியில் இடுபடுவதர்க்கு இது தக்க சமயம் ஆகும். உங்களுக்கு பல புது வேலை வாய்ப்புகள் வரும். மேலும் புது உத்தியோகம் உங்களை நல்ல சம்பளம் மற்றும் பதவியோடு மகிழ்விக்கும். எனினும் நீங்கள் இருக்கும் வேலையில் தொடருகுரீர்கள் என்றால், உங்களது ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு பற்றி உங்களது மேலாளரிடம் பேசுவதற்கு இது ஏற்ற காலகட்டமாகும். உங்களது அலுவலகத்தில் எந்த ஒரு அரசியலும் உங்களை சுற்றி நடக்காது. உங்களது முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு நல்ல உர்துனையாக இருப்பார்கள். இந்த காலகட்டம் உங்களுக்கு நிச்சயம் ஒரு பொற்காலமாக இருக்கும். மேலும் தொழிலதிபர்களுக்கு இது பல வெற்றிகள் நிறைந்த காலமாகும். உங்களுக்கு பெரிய வாடிக்கையாளர்களிடம் இருந்து பல நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். மேலும் உங்களது தொழிலை விரிவு படுத்த இது தகுந்த காலகட்டமாகும்.



கடந்த ஒரு வருடமாக நீங்கள் வழக்குகள் எதிலேனும் இருந்திருக்கலாம். ஆனால் அது இபொழுது எதிர் பார்த்த தீர்ப்போடு உங்களுக்கு சாதகமாக தீர்வுக்கு வரும். நீங்கள் வெளி நாட்டிற்கு செல்ல மற்றும் குடி உரிமை பெற முயர்ச்சிகின்றீர்கள் என்றால் அதற்க்கு இது ஏற்ற காலகட்டமாகும். நிதி நிலை உங்களுக்கு நல்லபடியாக உள்ளது. உங்களுது செலவுகள் குறையும். மேலும் வருமானம் அதிகரிக்கும். அதனால் நீங்கள் உங்களது கடன்களை விரைவாக அடைப்பீர்கள். மேலும் சேமிப்பு அதிகரிக்கும். நீங்கள் கிரெடிட் கார்டு ஏதேனும் வின்னப்பிதுல்லீர்கள் என்றால் அது எந்த ஒரு தடையும் இன்றி ஒப்புதல் பெற்று உங்களுக்கு விரைவாக கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு மற்றும் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான காலகட்டமாகும். நீங்கள் நீண்ட கால முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். எனினும் குறிகிய காலத்தில் முதலீடு செய்யும் நாள் வர்த்தகர்கள் மற்றும் ஊக வர்த்தகர்கள் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி முதலீடு செய்வது பாதுகாப்பானதாக இருக்கும். மேலும் நீங்கள் ரியல் ஈஸ்டட்டில் முதலீடும் செய்யலாம்.





Prev Topic

Next Topic