![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | மூன்றாம் பாகம் |
Mar 09, 2018 to Jul 10, 2018 கலவையான பலன்கள் (50 / 100)
குரு பெயர்ச்சியின் இந்த மூன்றாம் பாக கலகத்ததில் உங்களுக்கு ஒரு கலவையான பலன்களே கிடைக்க உள்ளது. நீங்கள் சனி மற்றும் ராகுவின் பலம் பெறுவீர்கள். ஏப்ரல் 18, 2018 வரை உங்களுக்கு கிரக நிலைகள் நன்றாக உள்ளது. அதனால் நீங்கள் ஏற்க்கனவே ஏதேனும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால் அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். எனினும் இந்த காலகட்டத்தில் புதிதாக எந்த ஒரு முயர்ச்சியும் எடுக்க வேண்டாம். உங்களது உடல் நலம் சீராக இருக்கும். எனினும் உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் தோன்றலாம். இதனால் நீங்கள் சரியான தூக்கம் இன்றி தவிப்பீர்கள்.
உங்களது மனைவி / கணவன் மற்றும் குழந்தைகளிடத்தில் சில வாக்குவாதம் எழலாம். எனினும் நீங்கள் பொறுமையாக இருந்தால் அதனை சுலபமாக சமாளித்து விடலாம். நீங்கள் உங்களது குழந்தைகள், மனைவி / கணவன் மற்றும் குடும்பத்தினர்களோடு அதிக நேரம் செலவிட வேண்டும். அவ்வாறு செய்தால் குடும்பத்தில் நல்ல சூழல் நிலவும். காதலர்களுக்கு இது நல்ல நேரமாக உள்ளது. எனினும் இந்த காலகட்டத்தில் திருமனத்திர்க்கான முயற்சி எதிலும் இடுபட வேண்டாம். நீங்கள் வெளி நாட்டிற்க்கு பயணிக்க அல்லது குடியர முயர்ச்சிக்கின்றீர்கள் என்றால் அது சற்று தாமதமாகும்.
உங்களது அலுவலகத்தில் உங்களது வேலை சுமையும் அழுத்தமும் அதிகரிக்கும். அதனால் நீங்கள் அலுவலகம் மற்றும் குடும்பத்தை சமாளிக்க தினருவீர்கள். எனினும் உங்களது கடின உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உங்களுக்கு கிடைக்கும். உங்களது மேலாளர் மற்றும் முதலாளி உங்களது கடின உழைப்பை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அதனால் நீங்கள் வேறு வேலைக்கு முயற்சிக்காமல் தற்போது இருக்கும் வேலையில் தொடர்ந்தாள் உங்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
தொழிலதிபர்கள் உங்களது ப்ரோஜெக்ட்டுகளை தக்க சமயத்தில் முடிப்பதற்காக கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களுக்கு கடினமான போட்டி நிலவினாலும் நீங்கள் அதனை தாக்கு பிடித்து முனேறி வருவீர்கள். எனினும் இந்த காலகட்டத்தில் புதிதாக எந்த ஒரு தொழிலும் தொடங்குவதை அல்லது விரிவு படுத்துவதை தவிர்க்கவும். உங்களுக்கு போதுமான பண வரத்து அல்லது வருமானம் இருக்கும். அதனால் உங்களது பணத் தேவைகளை நீங்கள் சமாளிப்பீர்கள்.
தேவையற்ற பயணம் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்குவது போன்றவற்றால் உங்களது செலவுகள் அதிகரிக்கலாம். அதனால் உங்களது கடன் விகிதம் அதிகரிக்க கூடும். முடிந்த அளவிற்கு இந்த காலகட்டத்தில் தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. மேலும் உங்கள் வீட்டிற்கு நண்பர்கள் மற்றும் விருந்தினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.
நீண்ட கால முதலீடு செய்பவர்களுக்கும் மற்றும் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கும் சில பின்னடைவுகள் இந்த குரு பெயர்ச்சியின் மூன்றாம் பாக காலகட்டத்தில் ஏற்படலாம். அதனால் முடிந்த அளவிற்கு புதிதாக எந்த ஒரு பங்கும் வாங்க விற்க முயற்ச்சிக்க வேண்டாம். எந்த ஒரு முதலீடும் செய்வதற்கு முன் நன்கு சிந்தித்து செயல் படுவது நல்லது.
Prev Topic
Next Topic