![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) வேலை / உத்யோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வேலை / உத்யோகம் |
வேலை / உத்யோகம்
கடந்த ஒரு வருடும் உங்களது வேலையில் நீங்கள் ஒரு கடினமான காலகட்டத்தையே சந்தித்திருந்திருப்பீர்கள். உங்களது மறைமுக எதிரியால் நீங்கள் அதிகம் இன்னல்களுக்கு ஆளாகி இருந்திருப்பீர்கள். நீங்கள் உங்களது அலுவலகத்தில் அவமானம் பட்டிருப்பீர்கள். மேலும் சிலர் வேலையை இழந்திருப்பார்கள். சிலருக்கு தேவை இல்லாத இட மாற்றமும் ஏற்பட்டிருக்கும். உங்களுக்கு ஒரு மோசமான மேலாளர் அமைந்திருப்பார். அதனால் நீங்கள் மேலும் உங்களது வேலையில் பிரச்சனைக்கு ஆளாகி உங்களது செல்வாக்கையும் இழந்திருப்பீர்கள்.
தற்போது குரு உங்களது 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த காலம் வரவுள்ளது. நீங்கள் வெகுவாக உங்களது வாழ்க்கையில் கீழே வந்ததால் உங்களது வளர்ச்சியின் வேகத்தை ஜென்ம ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். எனினும் உங்களது சோதனை காலம் முடிவடைந்தது.
நீங்கள் தற்போது வேலை மாற்றத்திற்கு முயற்சிக்க இது ஏற்ற காலகட்டமாகும். உங்களுக்கு புது நிறுவனத்தில் இருந்து நல்ல சம்பளத்துடனும் பதவியுடனும் வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் நீங்கள் வெளி நாட்டிற்கும் வேலை நிமித்தமாக பயணிக்க கூடும்.
நீங்கள் பெரிய ப்ரொஜெக்ட்டுகளில் வேலை செய்வீர்கள். அது உங்களது வளர்ச்சியை அதிகரிக்கும். உங்களது முதலாளி மற்றும் மேலாளர் உங்களது வேலையை பார்த்து பாராட்டுவார்கள். மேலும் அவர்கள் உங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களது அலுவலகத்தில் எந்த ஒரு பிரச்னையும் இருக்காது. அதனால் நீங்கள் மகிழ்ச்சியோடும் மன அமைதியோடும் இருப்பீர்கள்.
நீங்கள் அரசு வேலைக்கு முயற்சிக்குறீர்கள் என்றால், அது உங்களுக்கு அடுத்த வருடம் கிடைக்கும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில உங்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். மேலும் உங்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களது செல்வாக்கு பெருகும். நீங்கள் விரும்பிய இடத்தில் உங்களுக்கு வேலை கிடைக்கும். சிலருக்கு குரு பெயர்ச்சியால் உங்களது அலுவலகத்திர்க்குலேயே நல்ல மாற்றங்கள் நிகழும்.
Prev Topic
Next Topic