குரு பெயர்ச்சி (2017 - 2018) தொழில் மற்றும் இதர வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

தொழில் மற்றும் இதர வருமானம்


தொழில் அதிபர்கள் கடந்த ஒரு வருடமாக ஒரு சாதகமற்ற சூழலையே சந்தித்து வந்திருப்பீர்கள். உங்களது அணைத்து முயற்சிகளும் தோல்வியையே தந்திருக்கும். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்திருந்தால் நீங்கள் கடன் தொல்லையில் சிக்கி இருந்திருக்க கூடும். மேலும் மறைமுக எதிரிகள் மற்றும் பிரச்சனைகளால் நீங்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி இருந்திருக்க கூடும். நீங்கள் மொத்தத்தில் சோர்ந்து போயிருந்திருப்பீர்கள்.
ஆனால் இப்பொழுது நிகழ விருக்கும் பெயர்ச்சியில் குரு 7ஆம் வீட்டிற்கு வருவது உங்களுக்கு பல நல்ல செய்திகளை கொண்டு வரவுள்ளது. உங்களது கடந்த கால அனுபவங்களும் தோல்விகளும் உங்களுக்கு ஒரு நல்ல பாடத்தை கற்று கொடுத்திருக்கும். அந்த அனுபவத்தை நீங்கள் மனதில் கொண்டு இனி எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியை நோக்கி உங்களை கொண்டு செல்லும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.


நீங்கள் பல புதிய சிந்தனைகளோடும் யோசனைகளோடும் புது முயற்சில் ஈடு படுவீர்கள். மேலும் குரு உங்களது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களது லாபம் வரும் அடுத்த ஒரு வருட காலத்தில் பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். உங்களுக்கு பல வழிகளில் இருந்து பணம் வரும். மேலும் அயல் நாடுகளில் இருந்தும் உங்களுக்கு நிதி உதவி கிடைக்கும். போதுமான முதலீட்டை உங்களது புது முதலீட்டாளர்கள் வாயிலாக பெறுவீர்கள். மேலும் வங்கி கடனும் நீங்கள் எதிர் பார்த்த படி கிடைக்கும். பெரிய தொழில் வாய்ப்புகள் கிடைப்பதற்கு இந்த குரு பெயர்ச்சி ஒரு பொற்காலமாகவே உள்ளது. நீங்கள் தொடர்ந்து லாபகரமாக பணம் ஈட்டுவீர்கள்.
மேலும் நீங்கள் புது தொழில் ஏதேனும் தொடங்க முயற்சித்தால், அது கண்டிப்பாக வெற்றி பெறும். ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், சுய தொழில் புரிவோர்கள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், மற்றும் கமிசன் ஏஜெண்டுகளுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் நல்ல வாய்ப்புகளையும் பண வரவையும் தரும் பொற்காலமாக அமையும்.




Prev Topic

Next Topic