![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | முதல் பாகம் |
Sep 11, 2017 to Oct 25, 2017 விடிவு காலம் ஆரம்பம் (35 / 100)
ருண ரோகு சத்ரு ஸ்தானத்தில் இருந்து குரு பெயர்ச்சியாக உள்ளார். வாழ்த்துக்கள்!
குரு உங்களது 7 வீட்டிற்கு வருவது உங்களுக்கு பல நல்ல பலன்களை தர உள்ளது. எனினும் சனி தனுசு ராசிக்கு பெயர இருப்பதால் அடுத்த சில நாட்களுக்கு பொறுமையாக நீங்கள் இருக்க வேண்டும்.
கடந்த ஒரு வருடமாக உங்களது உடல் நலம் பெரிதாக பாத்திருந்திருக்கும். தற்போது நீங்கள் விரைந்து குணமடைந்து வருவீர்கள். மேலும் மற்று ஒரு மருத்துவரிடம் இரண்டாம் கருத்து கேட்டு உங்களது உண்மையான பிரச்சனைகளை கண்டறிய இது ஏற்ற காலகட்டமாகும். அஷ்டம சனியின் தாக்கம் சற்று அதிகமாகவே இந்த கால கட்டத்தில் இருக்கும். எனினும் குரு நல்ல இடத்தில் சஞ்சரிப்பதால், உங்களது குடும்பத்தில் இது நாள் வரை நிலவி வந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். உங்களுக்கு வழக்கு ஏதேனும் நிலுவையில் இருந்தால் அது ஒரு நல்ல முடிவுக்கு வரும். உங்களுக்கு சாதமாக உள்ளதோ இல்லையோ, கண்டிப்பாக வழக்குகள் ஒரு தீர்வு பெரும்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், தர்ச்சமயம் புது வரன் பார்ப்பதற்கு இது ஏற்ற காலம். வரும் அக்டோபர் 25, 2017 வரை சுப காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. நீங்கள் உங்களது குடும்பத்தை விட்டு தனியாக இருக்கிறீர்கள் என்றால், உங்களது குடும்பத்தினரோடு சேர்வதற்கு இது ஏற்ற நேரம். இடமாற்றத்திற்கு நீங்கள்.முயற்சிக்கலாம்
நீங்கள் வேலையில் இருப்பவராக இருந்தால், உங்களது வேலையை நீங்கள் இழக்க நேரலாம், இருப்பினும் அதை எண்ணி வருத்தப் பட வேண்டாம், ஏன் என்றால் அது கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர உள்ளது. உங்களது அடுத்த வேலை மிக சிறந்ததாக இருக்க போவதால் நீங்கள் நேர்காணல் மற்றும் அதற்கான முயற்சியில் ஈடுபடுவது நல்லது. புது வாய்ப்புகளை தேட ஆரம்பியுங்கள்.
தொழிலதிபர்கள் மிக அதிகமான சங்கடத்தில் இருந்து இருப்பீர்கள். உங்களுக்கு போதுமான அளவு பிரச்சனைகள் இருக்கும். எனினும் ஒரு நல்ல வழி கிடைத்து நீண்ட கால தீர்வு கிடைக்கும். இருப்பினும் புது தொழில் அல்லது புது முயற்சி ஏதேனும் எடுப்பதாயின் சற்று.பொறுத்திருக்கவும். உங்களது நிதி பிரச்சனை படிப் படியாக குறைய ஆரம்பித்து உங்களுக்கு ஒரு தீர்வு பிறக்கும். நிதி குறித்த இந்த ஒன்றாம் பாக காலகட்டம் உங்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கும். எனினும் குருவின் பலத்தால் உங்களது கடன்களை நீங்கள் சமாளிப்பீர்கள்.
மேலும் வர்த்தகத்தில் ஈடுபட இது ஏற்ற காலம் இல்லை. நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் சிக்கி உள்ளீர்கள் என்றால், அது இந்த பெயர்ச்சியின் ஆரம்ப காலத்தில் நட்டத்தை கொடுக்ககூடும் . பங்கு சந்தை வர்த்தகத்தை தர்ச்சமயம் தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic