![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) உடல் நலம் / ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | உடல் நலம் / ஆரோக்கியம் |
உடல் நலம் / ஆரோக்கியம்
கடந்த ஒரு ஆண்டுகளாக 6ஆம் வீட்டில் குருவும், 8ஆம் வீட்டில் சனியின் சஞ்சரித்து உங்களது உடல் நலத்தில் பல பாதிப்புகளை எறிபடுத்தி இருந்திருக்க கூடும். ஒரு வேலை நீங்கள் அறுவை சிகிச்சை ஏதேனும் செய்திருந்தால், அதன் வலியில் இருந்து இப்பொழுது மீண்டு வருவீர்கள். நீங்கள் ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். மேலும் குரு உங்களது ஜென்ம ராசியில் நிலவுவதால் நீங்கள் அதிக நேர்மறை சக்திகளை உணருவீர்கள். நீண்ட கால மன அழுத்தத்தில் இருந்தும் மன உளைச்சலில் இருந்தும் இப்பொழுது நீங்கள் மீண்டு வருவீர்கள்.
மேலும் கடந்த ஆண்டில் உங்களது குடும்பத்தினர் எவரேனும் உடல் நலம் குன்றி இருந்தால் அவர்கள் தற்போது நலம் பெற ஒரு ஏற்ற காலமாக இந்த குரு பெயர்ச்சி உள்ளது. உங்களது மருத்துவ செலவுகள் குறையும். மேலும் நீங்கள் அதிக உடல் எடையால் அவதிப் படுகுறீர்கள் என்றால், அதற்கான தக்க உடற் பயிற்சியும் வைத்தியமும் பெற்று நீங்கள் இயல்பான தோற்றத்திற்கு வர இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. மேலும் அடுத்து ஒரு வருடத்துக்கு நீங்கள் உங்களது உடல் நலத்தை காத்து நல்ல நிலையில் வைத்துக்கொள்ள தக்க காலமாக உள்ளது.
ஆதித்ய ஹிருதயம் மற்றும் ஹனுமான் சாலிசாவை தினமும் காலையில் கேட்பது உங்களுக்கு உற்சாகத்தையும் தெம்பையும் தரும். மேலும் சுதர்சன மகா மந்திரத்தை தொடர்ந்து கேட்டு வருவது பல நல்ல பலன்களை உங்களுக்கு தர வல்லது. இதனால் நீங்கள் மன தெளிவையும் தைரியத்தையும் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic