குரு பெயர்ச்சி (2017 - 2018) திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

திரைப்படம், காலை, அரசியல்


திரை நட்சத்திரங்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் மோசமான காலமாக கடந்த ஒரு வருடம் இருந்திருக்கும். இந்த சூழல் மாறி, தற்போது உங்களது நிலை நல்ல மாதிரியாக மாற தொடங்கும். இந்த குரு பெயர்ச்சி காலம் உங்களுக்கு நல்ல வளர்ச்சியை தரும். குரு 7ஆம் வீட்டிற்கு செல்வதால் உங்களுக்கு இது வரை இருந்த மறைமுக எதிரிகள் இனி எந்த தொந்தரவும் தர மாட்டார்கள். பல நல்ல வாய்ப்புகள் கிடைப்பதற்கு இது ஒரு பொற்காலம்மாகவே உள்ளது. மேலும் எந்த ஒரு சிக்கல்களும் இல்லாமல் நீங்கள் உங்கள் துறையில் வளர்ச்சி அடைவீர்கள்.
திரை நட்சத்திரங்களுக்கு இது முன்னேற்றத்தை தரும் நல்ல காலகட்டமாகும். அடுத்த ஒரு வருடத்திற்கு வெளிவரவிருக்கும் உங்களது திரை படங்கள் நல்ல வெற்றியையும் வசூலையும் கொடுக்கும். நீங்கள் உங்களது துறையில் பேரும் புகழும் பெறுவீர்கள். உங்களது நிதி நிலையும் நல்ல வளர்ச்சியை பெரும். மேலும் அரசியல்வாதிகளுக்கு பெரிய வெற்றிகள் கிடைப்பதற்கு இந்த குரு பெயர்ச்சி காலம் நல்ல சூழலை தரும்.




Prev Topic

Next Topic