குரு பெயர்ச்சி (2017 - 2018) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

Oct 25, 2017 to Mar 09, 2018 நல்ல நேரம் (75 / 100)


நீங்கள் மேலும் அஸ்தம சனியின் பிடியில் இருந்து வெளிவர உள்ளீர்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாகு சனி உங்களது 8ஆம் வீட்டில் இருந்து உங்களுக்கு பல இன்னல்களை தந்திருப்பார். தற்போது அவர் உங்களது 9ஆம் வீட்டிற்கு செல்வதால் உங்களுக்கு மனதளவிலும் உடளவிலும் பெரிய நிவாரணம் கிடைக்க உதவுவார். சனி மற்றும் குருவின் நேர்மறை சக்திகள் உங்களுக்கு அதிகரித்து நல்ல சூழல் உருவாக உள்ளது. நீங்கள் உங்களது இத்தனை நாட்களாக அனுபவித்து வந்த உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடு பட்டு தற்போது நல்ல ஆரோக்கியத்தை காண்பீர்கள். மேலும் உங்களது குடும்பத்தினருடைய உடல் நலமும் மேம்படும். உங்களது மருத்துவ செலவுகள் குறையும். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.
உங்களது உறவினர்களுக்கு மத்தியில் கடந்த ஒரு வருடமாக நீங்கள் மிக கடினமான சூழலை சந்தித்திருந்திருப்பீர்கள். ஆனால் தற்போது பல நல்ல பலன்களை நீங்கள் குரு மற்றும் சனியின் பலத்தால் காணப் போகுறீர்கள். நீங்கள் உங்களது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் இருந்து பிரிந்திருந்தால், தற்போது அவர்களோடு ஒன்று சேருவீர்கள். மேலும் நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு நல்ல வரன் கிடைக்கவும் மேலும் சுப காரியங்கள் நிகழ்த்தவும் இது ஏற்ற காலகட்டமாகும்.
நீங்கள் விரும்பியவரிடம் இருந்து பிரிந்து இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு தற்போது புது உறவு கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் அவருடன் நல்ல நேரம் செலவிடுவீர்கள். மேலும் இந்த காலகட்டத்தில் உங்களது திருமணம் குறித்த முயற்சியில் நீங்கள் ஈடுபடலாம். அது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.



மாணவர்கள் தங்களது தவறுகளை உணர்ந்து அதை சரி செய்து நன்றாக படிக்க ஆரம்பிப்பார்கள். மேலும் நீங்கள் விரும்பிய படி உங்களுக்கு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்களுக்கு பார்க்கும் வேலையில் திருப்தி இல்லை என்றால் அல்லது வேலை தேடிக் கொண்டிருக்குறீர்கள் என்றால், புது வேலை கிடைப்பதற்கு இது ஏற்ற காலமாகும். உங்களுக்கு புது வேலை வாய்ப்பு நல்ல சம்பளத்துடனும் பதவியுடனும் கிடைக்கும். மேலும் உங்களது மேலாளரிடம் உங்களது பதவி உயர்வை பற்றியும் நீங்கள் பேசலாம். அது உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். மேலும் உங்களது அலுவலகத்தில் இனி எந்த ஒரு அரசியலும் உங்களை குறித்து நிகழாது. உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் ஒரு நல்ல சூழலை உங்களது அலுவலகத்தில் காணலாம்.
தொழில் செய்பவர்கள் உங்களது மோசமான காலக்கட்டத்தில் இருந்து மெதுவாக மீள ஆரம்பிப்பீர்கள். நீங்கள் உங்களது தொழில் வளர்ச்சிக்காக புது திட்டங்கள் வகுப்பீர்கள். அதனால் உங்களது தொழில் ஒரு நல்ல லாபகரமான நிலையை நோக்கி செல்ல ஆரம்பிக்கும். புது முதலீட்டாளர்கள் உங்களுக்கு எதிர் பார்த்த நிதி உதவி செய்வார்கள். மேலும் உங்களுக்கு வங்கியில் கடன் கிடைக்கும். மேலும் உங்களது தொழிலுக்கு புது பங்குதாரர்கள் கிடைப்பார்கள். உங்களது பண பிரச்சனைகள் படிப்படியாக குறைய தொடங்கும். இது உங்களுக்கு மன நிம்மதியை தரும்.
கடந்தது ஒரு வருடம் நீங்கள் ஏதேனும் சட்ட சிக்கல்களில் இருந்திருக்க கூடும். ஆனால் இப்பொழுது அதில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள். நீதிமன்றம் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு அளிக்க கூடும். நீங்கள் பயணம் செய்வதற்கும் வெளி நாட்டிற்கு குடியேற்றம் செய்வதற்கும் இது ஏற்ற காலகட்டமாகும். உங்களது நிதி நிலை மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் உங்களது கடன்களை ஒவொன்றாக அடைக்க முயல்வீர்கள். உங்களது செலவுகளும் குறையும். மேலும் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் வங்கி கடனுக்காக விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால் அது ஒப்புதல் பெரும்.




நீங்கள் இந்த காலகட்டத்தில் பங்கு சந்தை முதலீட்டில் ஈடுபடலாம். முக்கியமாக நீண்ட கால முதலீடு லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட்டில் முதலீடு அதிர்ஷ்டகரமான இருக்கும். நீங்கள் நாள் வர்த்தகராக இருந்தால் கடந்த ஆண்டுகளில் நீங்கள் அதிக நட்டத்தை கண்டிருப்பீர்கள். அதனால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி தற்போது முதலீடு செய்தால் லாபகரமாக இருக்கும்.


Prev Topic

Next Topic