குரு பெயர்ச்சி (2017 - 2018) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

Mar 09, 2018 to Jul 10, 2018 மிதமான பின்னடைவு (50 / 100)


இந்த காலகட்டத்தில் குரு சற்று பின்னோக்கி செல்வார். இது கெட்ட நேரம் இல்லை, எனினும் நீங்கள் புதிதாக எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபட இது ஏற்ற காலமாகும். உங்களது உடல் நலம் நல்ல ஆரோக்கியத்தில் இருக்கும். நீங்கள் உங்களது உணவில் கவனம் செலுத்துவீர்கள். மேலும் நீங்கள் தேவையான உடற்பயற்சி செய்வீர்கள். எனினும் உங்களது தந்தையின் உடல் நலத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது.
உங்களது மனைவி / கணவனுக்கிடையே சில பிரச்சனைகள் எழலாம். அது ஒருசில கருத்து வேறுபாடால் வந்திருக்கும். எனினும் அது காலப் போக்கில் சரியாகி விடும். அத்தகைய சூழலை நீங்கள் பொறுமையோடு சமாளிப்பீர்கள். எனினும் நீங்கள் உங்களது குழந்தைகள், பெற்றோர் மற்றும் கணவன்/மனைவியோடு அதிக நேரம் செலவிடுவதால் உங்களது உறவு நிலை மகிழ்ச்சியோடு இருக்கும்.
நீங்கள் யாரையேனும் விரும்புகுறீர்கள் என்றால் அவருடன் நீங்கள் போதுமான நேரம் செலவிட முடியாமல் இருக்கும். நீங்கள் சில பிரச்னைகளில் இருப்பீர்கள். தேவை இல்லாமல் பயணிப்பதை.தவிர்க்கவும் நீங்கள் வெளி நாட்டில் இருப்பவராக இருந்தால் அதிக தனிமையை உணருவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்களது வேலை நிமித்தமான அழுத்தம் அதிகரிக்கும். நீங்கள் வேலையிலும் குடும்பத்திலும் சமமான அளவு கவனம் செலுத்த முடியாமல் திணறுவீர்கள். எனினும் உங்களது கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள். உங்களது முதலாளியும் மேலாளரும் உங்களது கடின உழைப்பை மற்றும் ஈடுபாட்டை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள் அதனால் இந்த தருணத்தில் வேறு வேலை தேடாமல் இந்த வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்துவது எதிர் காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்களை கொண்டு வரும்.


தொழிலதிபர்கள் உங்களது ப்ரொஜெக்ட்டை சரியான நேரத்தில் முடிப்பதில் மும்மரமாக இருப்பீர்கள். மேலும் புது ஆட்களையும் வேலைக்கு எடுப்பீர்கள். நீங்கள் உங்களது தொழிலில் அதிகம் போட்டியாளர்களை சந்திக்க நேரலாம். எனினும் உங்களுக்கு பல புது ப்ரொஜெக்ட்டுகள் கிடைக்க உள்ளது. உங்களது பண வரவு சீராக இருக்கும், இருந்தாலும் அது போதுமானதாகவே இருக்கும். உங்களது கடன்களை நீங்கள் அடைப்பீர்கள்.
பயணம், ஆடம்பர பொருட்கள் வாங்குவது, பொழுதுபோக்கு போன்றவற்றில் நீங்கள் அதிகம் செலவு செய்யக் கூடும். உங்களது கடன் இதனால் இந்த மூன்றாம் பாகத்தில் அதிகமாகலாம். மேலும் உங்களது குடும்பத்தினருக்காக மருத்துவ செலவுகள் செய்ய நேரலாம்.
நீண்ட காலம் வர்த்தகம் செய்பவர்களும் முதலீட்டாளர்களும் சில பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். அதனால் புது முயற்சியில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. அதற்க்கு பதிலாக இருக்கும் பங்குகளை நல்ல நிலையில் பார்த்து கொள்வது உத்தமம்.




Prev Topic

Next Topic