குரு பெயர்ச்சி (2017 - 2018) வர்த்தகம் மற்றும் முதலீடு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடு


பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு கடந்த ஒரு வருடம் மிக மோசமானதாகவே இருந்திருக்க கூடும். நீங்கள் உங்களது முதலீட்டை இழந்திருக்கக் கூடும். நீங்கள் பெரிய அளவில் நட்டத்தை அடைந்திருந்தாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்களது நிதி நிலை உங்களை உருக்குலைய வைத்திருக்கும்.
எனினும் இந்த பெயர்ச்சி காலத்தில், குரு 7ஆம் வீட்டிற்கு செல்வதால், உங்களுக்கு இது வரையிலூம் ஏற்பட்டிருந்த நட்டங்கள் இப்பொழுது ஒரு முடிவிற்கு வரும். எனினும் நீங்கள் உங்களது முதலீட்டில் வளர்ச்சியை பெற எண்ணினால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி நடந்து கொள்வது உத்தமம். இல்லையென்றால் நீங்கள் உங்களது முதலீட்டை தங்கம், பாத்திரம் மற்றும் அசையா சொத்துக்கள் மீது போடலாம். இது ஒரு அளவிற்கு உங்களுக்கு பாதுகாப்பான முதலீடாக இருக்கும். வரும் ஜூலை 2018 மேல் ஊக வர்த்தகம் சிலருக்கு லாபகமாக இருக்கும்.


நீங்கள் வீடு மனை வாங்க முயற்சித்தால், இந்த குரு பெயர்ச்சி காலம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. இந்த குரு பெயர்ச்சி காலம் நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு ஒரு தக்க காலமாக உள்ளது. வாங்கல் விற்றால் இரண்டும் உங்களுக்கு லாபம் தரும்.


Prev Topic

Next Topic