குரு பெயர்ச்சி (2017 - 2018) பயணம்,வெளிநாட்டு பயணம், மற்றும் குடியேற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

பயணம்,வெளிநாட்டு பயணம், மற்றும் குடியேற்றம்


கடந்த காலத்தில் நீங்கள் அதிகம் பயணம் செய்திருந்தாலும் அது உங்களுக்கு எதிர் பார்த்த பலன்களை தந்திருக்காது. மேலும் நீங்கள் விசா கிடைப்பதில் பல சிக்கல்களை சந்தித்திருந்திருப்பீர்கள். எனினும் அடுத்த ஒரு வருட காலத்திற்கு நீங்கள் இது வரை கடந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு சுலபமாக விசா மற்றும் குடியுரிமை பெறுவீர்கள். நீண்ட காலமாக நீங்கள் எதிர் பார்த்திருந்த குடியுரிமைக்கான ஒப்புதலை இப்பொழுது பெறுவீர்கள். மேலும் உங்களது அயல் நாட்டு பயணம் உங்களை மகிழ்விக்கும். மேலும் அயல் நாட்டில் இருந்து தாய் நாடு திரும்புபவர்களும் அதிகம் மகிழ்ச்சியோடு காணப்படுவார்கள். மொத்தத்தில் உங்களது பயணம் உங்களை மகிழ்விக்க கூடியதாகவே இருக்கும்.
மேலும் நீங்கள் அதிகப் பயணம் செய்தாலும் அல்லது அதிக நேரம் வேலை பார்த்தாலும் சோர்வடைய மாடீர்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியதோடு இருப்பீர்கள். மேலும் நீங்கள் வெளிநாடுகளில் நிரந்தர குடியேற்றத்திற்காக முயற்சிக்கின்றீர்கள் என்றல், இது ஏற்ற காலமாகவே உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் குடியேற இது நல்ல தருணமாகவே உங்களுக்கு உள்ளது. மேலும் வரும் அக்டோபர் 2017 சனி பெயர்ச்சி நிகழவிருப்பதால், மேலும் நீங்கள் வெளி நாட்டில் குடியுரிமை பெறுவதற்கு இது தக்க காலகட்டமாகும்.




Prev Topic

Next Topic