![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) வேலை/ உத்யோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வேலை/ உத்யோகம் |
வேலை/ உத்யோகம்
மறைமுக எதிரிகளுடைய தாக்கத்தினால் உங்களது அலுவலகத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் உங்களை வெகுவாக சோர்வடைய செய்திருக்கும். கடந்த ஒரு வருட காலமாகவே உங்களுக்கு ஒரு சோதனை நிறைந்த காலமாக இருந்திருக்கும். நீங்கள் உங்களது அலுவலகத்தில் அவமானம் பட்டிருந்தாலும் ஆச்சரிய படுவத்திற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் உங்களது வேலையை விடவும் நினைத்திருந்திருக்கலாம். மேலும் பல தேவை அற்ற மாற்றங்களை உங்களது வேலையில் சந்தித்திருந்திருப்பீர்கள். உங்களது மேலாளரும் உங்களிடத்தில் கடினமாகவே நடந்திருந்திருக்க கூடும். அது உங்களது பேரை கெடுக்கவும் செய்திருந்திருக்கலாம்.
ஆனால் இப்பொழுது குரு பகவான் உங்களது ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், அடுத்த ஒரு வருட காலத்திற்கு நீங்கள் பல நேர்மறை பலன்களை அனுபவிப்பீர்கள். மேலும் இந்த காலகட்டம் நீங்கள் வேலை மாற்றத்திற்கு முயற்சிக்க ஏற்ற காலமாக உள்ளது. நீங்கள் பல வாய்ப்புகளை பெறுவீர்கள். ஒரு பெரிய அலுவலகத்தில் நல்ல சம்பளத்தோடு உங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் நீங்கள் சற்று துணித்து செயல் பட்டால் வெளிநாட்டிற்கு செல்லவும் வாய்ப்புகள் கைகூடும். மொத்தத்தில், இந்த குரு பெயர்ச்சி காலம் உங்களுக்கு பல நல்ல வேலை வாய்ப்புகளை கொண்டு வர உள்ளது.
நீங்கள் புது வேலையில் சேர்ந்ததும் உங்களது திறமையை நன்றாக வெளி படுத்துவீ ர்கள். இது உங்களது மேலாளரையும் மற்ற அதிகாரிகளையும் மகிழ்விக்கும். அது மட்டும் இன்றி அவர்கள் உங்களது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் துணையாக இருப்பார்கள். எந்த ஒரு சிக்கல்களும் இன்றி நீங்க மகிழ்ச்சியோடும் மன நிம்மதியோடும் வேலை பார்ப்பீர்கள். மேலும் நீங்கள் அரசு உத்யோகத்திற்கு முயற்சி செய்கிறீர்கள் என்றால், அடுத்த ஒரு வருடம் உங்களுக்கு ஏற்ற காலமாகவே உள்ளது. அலுவலகத்தில் உங்களது மரியாதை உயரும். மேலும் உங்களுக்கு சன்மானமும் கிடைக்கும். இது உங்களை நிச்சயம் மகிழ்விக்கும். மேலும் நீங்கள் இடமாற்றம் ஏதேனும் எதிர் பார்த்தல் அது கண்டிப்பாக இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நிகழும். மேலும், குரு பகவான் அலுவலகத்திற்குள்ளேயே நீங்கள் எதிர் பார்த்த மாற்றத்தை தருவார்.
Prev Topic
Next Topic