![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) தொழில் மற்றும் வேற்று வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | தொழில் மற்றும் வேற்று வருமானம் |
தொழில் மற்றும் வேற்று வருமானம்
நீங்கள் இது வரையிலும் உங்களது தொழிலில் எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் வந்திருப்பீர்கள் என்றால் அது உங்களது ஜென்ம ஜாதகம் நல்ல நிலையில் இருப்பதையே குறிக்கும். எனினும் கடந்த 12 மாதங்கள் நீங்கள் சில தோல்விகளையும், அதிர்ஷ்டம் குறைந்தும் மற்றும் நிதி பிரச்சினைகளாலும் அவதி பட்டு வந்திருப்பீர்கள். ஆனால் இப்பொழுது உங்களது ராசிக்கு அணைத்து முக்கிய கிரகங்களான குரு, சனி, ராகு மற்றும் கேது இப்பொழுது ஒரு நல்ல நிலையில் சஞ்சரிக்க உள்ளதால், நீங்கள் பல நல்ல செய்திகளை உங்களது தொழில் எதிர்ப்பு பார்க்கலாம். சொல்லப் போனால் நீங்கள் சோதனை மிகுந்த காலத்தை கடந்து வந்திருப்பீர்கள். இந்த பெயர்ச்சி காலத்தில் குரு 4ஆம் வீட்டிற்கு சஞ்சரிக்க உள்ளதால், இனி வரும் காலம் உங்களுக்கு நல்லதாகவே உள்ளது.
உங்களது தொழில் நீங்கள் ஒரு திருப்பு முனையை காணலாம். நீங்கள் பல நல்ல யோசனைகள் கிடைத்து அதை வெற்றிகரமாக செயல் படுத்தவும் செய்வீர்கள். உங்களது பண வரவு ஒரு நல்ல நிலையில் இருக்கும். மேலும் உங்களுக்கு தொழில் செய்ய போதுமான நிதி உதவியும் கிடைக்கும். புது முதலீட்டாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள். இதனால் நீங்கள் உங்களது தொழிலை விரிவுப் படுத்துவீர்கள். அது மட்டும் இல்லது, நீங்கள் எதிர் பார்த்த வங்கி கடனும் எளிதில் கிடைக்கும். மேலும் உங்களுக்கு புது ப்ரொஜெக்ட்டுகளும் கிடைக்கும். இதனால் உங்களுக்கு பண வரவு அதிகரித்து நீங்கள் கடன்களில் இருந்து மீண்டு வருவீர்கள்.
நீங்கள் புதிதாக தொழில் ஏதேனும் தொடங்க முயற்சித்தால், அது வெற்றி பெரும். எனினும் பிரீலான்ஸ் போன்ற முயற்சிகள் வெற்றி பெரும். சுய தொழில் செய்பவர்கள், பிரீலான்ஸ், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள், மற்றும் கமிஷன் ஏஜெண்டுகளுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் பல ஆச்சரியப்படத்தக்க மாற்றங்களையும் வெற்றியையும் கொண்டு வரும். உங்களது பேரும் புகழும் உயரும். இது மட்டும் இல்லாது உங்களது நிதி நிலையும் நல்ல நிலையில் இருக்கும்.
Prev Topic
Next Topic