குரு பெயர்ச்சி (2017 - 2018) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

Aug 06, 2018 to Oct 11, 2018 பிரமாதமான காலம் (85 / 100)


இந்த குரு பெயர்ச்சியின் நான்காம் பாகத்தில் குரு மற்றும் சனி, இருவருமே உங்களுக்கு பல நல்ல பலன்களை தர உள்ளனர். உங்களது வாழ்க்கை நேர்மறையாக முன்னேர்வதை பார்த்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இது நாள் வரை நீங்கள் எதிர் பார்த்த நல்ல பலன்கள் தற்போது உங்களுக்கு கிடைக்க உள்ளது. உங்களது உடல் நலம் முன்னேற்றத்தை காணும். நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். உங்களது குடும்பத்தினருடைய ஆர்ரோக்கியமும் முன்னேறும். உங்களது மருத்துவ செலவுகள் குறையும்.
உங்களது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உங்களது மனைவி / கணவன் நல்ல உறுதுணையாக இருப்பார். திருமணம் ஆனவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். மேலும் நீண்ட காலமாக குழந்தைக்காக காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெற இது ஏற்ற காலமாகும். மேலும் நீங்கள் உல்லாச பயணம் செல்ல இது ஏற்ற சமயமாகும்.
உங்களது மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் விரும்புபவரிடத்தில் உங்களது விருப்பத்தை கூறுவீர்கள். காதல் திருமனத்த்ரிக்கு உங்களது பெற்றோர்கள் சம்மதிப்பார்கள். மேலும் உங்களது குடும்பத்தில் சுப காரியங்கள் செய்வீர்கள். அது உங்களை மகிழ்விக்கும். உங்கள் குடும்பத்திற்கு நல்ல பேரும் புகழும் கிடைக்கும்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த காலகட்டமாகும். நீங்கள் எதிர் பார்த்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். மேலும் பெரிய கம்பனிகளில் புதிய வேலை தேடுவதற்கும் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் தற்காலிகமாக பணியில் நியமிக்க பட்டுள்ளீர்கள் என்றால் அது நிரந்தரமாகும். நீங்கள் உங்களது வேலை சுமையை சீராக சமாளிப்பீர்கள்.
தொழிலதிபர்களுக்கு இந்த நான்காம் பாக காலகட்டம் நல்ல முன்னேட்ட்ரத்தை கொண்டு வர உள்ளது. உங்களது பேரும் புகழும் உயரும். நீங்கள் உங்களது தொழிலை விரிவு படுத்துவீர்கள். அது உங்களை மகிழ்விக்கும். நீங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேருவீர்கள். மேலும் நீண்ட கால வாடிக்கையாளர்களும் உங்களுக்கு கிடைப்பார்கள். அதனால் உங்களது நிதி நிலையும் பண வரத்தும் சீராக இருக்கும். மேலும் முதலீட்டாளர்கள் உங்களது தொழில் வளர்ச்சிக்கு நிதி உதவி செய்வார்கள். சுய தொழில் செய்பவர்கள் மற்றும் கமிஷன் ஏஜெண்டுகள் நல்ல முன்னேற்றத்தோடு சன்மானமும் லாபத்தையும் பெறுவீர்கள்.
நீங்கள் உங்களது பண பிரச்சனைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்களது பண வரவு அதிகரிக்கும். அதனால் சேமிப்பும் அதிகமாகும். புது வீடு வாங்க இது ஏற்ற காலகட்டமாகும். பங்கு சந்தை முதலீடு உங்களுக்கு லாபகரமாக இருக்கும். மேலும் ஊக வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்கு இது அதிர்ஷ்டம் நிறைந்த காலமாகும்.




Prev Topic

Next Topic