குரு பெயர்ச்சி (2017 - 2018) உடல் நலம் / ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

உடல் நலம் / ஆரோக்கியம்


சனியும் குருவும் கடந்த ஒரு ஆண்டு காலமாக உங்களது களத்ர ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்ததால் உங்களது வாழ்க்கையில் பல ஏமாற்றங்களையும், வலிகளையும் மற்றும் தோல்விகளையும் சந்தித்து வந்துருப்பீர்கள்.
இது உங்களை மனதளவில் பெரிதும் பாதித்து இருந்திருக்கும். ஆனால் இனி வரும் காலங்களில் நீங்கள் இந்த சூழலில் இருந்து வெளி வந்து, குருவின் பலத்தால் மன தைரியத்துடனும், தன்னபிக்கையுடனும் காணப்படுவீர்கள்.
மேலும் நீங்கள் சில விசயங்களில் அதிக மன அழுத்தத்துடன் இருந்திருப்பீர்கள். ஆனால் இனி உங்களுக்கு இதற்கான தக்க சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவீர்கள். உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை கண்டு நீங்கள் வியந்து போவீர்கள். அது உங்களை நிச்சயம் மகிழ்விக்கும். நீங்கள் உங்களது உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள். நீங்கள் சில உடல் பயிற்சி செய்யவதாலும், தக்க வைத்தியம் எடுத்து கொள்வதாலும், ரத்த அழுத்தம், நீரழிவு, கொழுப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து விரைந்து குணமடைவீர்கள்.


நீங்கள் விளையாட்டில் ஈடுபட்டிருக்குறீர்கள் அல்லாத விளையாட்டு வீரர் / வீராங்கனையாக இருந்தால், நீங்கள் இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில் நிறைய வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். குருவின் அருளால் நீங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். எனினும் தினமும் சுதர்சன மகா மந்திரத்தை கேட்டு வருவதால் விரைவில் உடல் உபாதைகளில் இருந்து குணமடைவீர்கள்.



Prev Topic

Next Topic