குரு பெயர்ச்சி (2017 - 2018) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

வழக்கு


கடந்த ஆண்டுகளில் உங்களது கிரக நிலைகள் சரியாக இல்லாததால், ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருந்தால், அது தற்போது நிகழ விருக்கும் குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் எதிர் பார்த்த தீர்ப்போடு முடிவடையும். நீங்கள் உங்களது மறைமுக எதிரியை அடையாளம் காண்பீர்கள். எனினும் நீங்கள் உங்களது வழக்கறிஞரை மாற்றுவது உத்தமம். அவரால் நீங்கள் சில சிக்கல்களையும் வாக்குவாதத்தையும் சந்தித்திருந்திருப்பீர்கள். எனினும் அவரை மாற்றுவதால், இது நாள் வரை உங்களுக்கு நிலவி வந்த தாமதம் நீங்கி நீங்கள் விரைவில் வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். 6ஆம் வீட்டில் சஞ்சரிக்கஉள்ள சனி உங்களது மறைமுக எதிரிகளின் செயல்பாட்டை முறியடிப்பார். மேலும் உங்களுக்கு நல்லதொரு சூழலை கொடுப்பர்.


நீங்கள் எதிர் பார்த்தபடியே உங்களுக்கு தீர்ப்பு கிடைக்கும். மேலும், நீங்கள் குழந்தை காவல் அல்லது ஜீவனம்சம் போன்ற வழக்குகளில் இருந்தீர்கள் என்றால் அது உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். எனிமும் ஜென்ம ராகு உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால், நீங்கள் நினைத்தபடி அனைத்தும் நடந்தாலும், எதிர் பார்த்த வெற்றி கிடைத்தாலும் உங்கள் மனதில் சிறிய தேவையற்ற பயம் இருக்கும். அதில் இருந்து வெளி வர நீங்கள் சுதர்சன மகா மந்திரத்தை தொடர்ந்து கேட்டு வருவது நல்லது. மேலும் த்யானம் செய்வதால் உங்களது மனம் தேவையற்ற சிந்தனைகளில் இருந்து விடு பெற்று நிலை பெரும்.


Prev Topic

Next Topic