![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | காதல் |
காதல்
உங்களது காதல் உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தால் அது இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில் சரியாகி விடும். நீங்கள் கடந்த 12 மாதங்களாக வலி மிகுந்த ஒரு சூழலையே அனுபவித்து வந்திருப்பீர்கள். ஆனால் இப்பொழுது நிகழவிருக்கும் இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் அதிக மன உறுதி பெற்று புது உறவை ஏற்றுக் கொள்ள தயாராவீர்கள். எனினும், ராகு உங்களது ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் காதல் வயப் வடமாட்டீர்கள். எனினும், திருமணத்திற்கு உங்களுக்கு ஏற்ற வரனை பார்ப்பதற்கும் விரும்பியபடி திருமணம் செய்வதற்கும் இது ஏற்ற காலமாகும். சொல்லப்போனால், பெற்றோரால் நிச்சயிக்க படும் திருமணம் தடை இன்றி இனிதே நடக்கும்.
உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்களது தன்னம்பிக்கையை அதிகரிப்பார்கள். உங்களது அணைத்து விசயங்களிலும் உறுதுணையாக இருப்பார்கள்.
மேலும் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பேரு பெறுவதற்கு இது தக்க காலகட்டமாக இருக்கும். எனிமும் நீங்கள் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து மற்றும் தக்க மருத்துவர் ஆலோசனை பெறுவதால் எதிர் பார்த்த பலன்களை அடையலாம். மேலும் திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியிருந்தால், நீங்கள் இப்பொழுது IVF அல்லது IUI போன்ற சிகிச்சை பெற்றுக் கொள்ளவது நல்ல எதிர் பார்த்த பலன்களை உங்களக்கு தரும். மேலும் சனி உங்களது 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ராகு 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. நீங்கள் உங்களது திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic