![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
கடந்த ஒரு வருடமாக உங்களுக்கு அணைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் இல்லாமல் இருந்திருப்பார்கள். இதனால் நீங்கள் உங்களது வாழ்க்கையில், முக்கியமாக குடும்பத்தில் அதிக பிரச்சனைககளையும் மன சங்கடங்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள். கடந்த 12 மாதங்கள் உங்களுக்கு ஒரு சோதனை நிறைந்த காலமாகவே இருந்திருக்கும்.
ஆனால் இப்பொழுது பெயரவிருக்கும் குரு பகவான் உங்களுக்கு பல எதிர் பாராத நன்மைகளை தரவிருக்கின்றார். இது மட்டும் இல்லாமல் உங்களுக்கு சனி பெயர்ச்சியும் ஒரு நல்ல சூழலில் இருக்கின்றது. இதனால்அடுத்த 2 வருடத்திற்கு உங்களது வாழ்க்கையில் பல நல்ல விசயங்களை நீங்கள் காணவிருக்கின்றீர்கள். இது உங்களை மிகவும் மகிழ்விக்கக் கூடும்.
நிகழவிருக்கும் இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் உங்களது வாழ்க்கையில் பல நேர்மறை மாற்றங்களை சந்திக்க உள்ளீர்கள். முக்கியமாக நீங்கள் உங்களது சக்திகளை மீண்டும் பெறுவீர்கள். உங்களது மன அழுத்தம் மற்றும் பதட்டம் இனி வெகுவாக குறையும். எனினும் ராகு உங்களுக்கு நல்ல நிலையில் இல்லாததால் சில பாதகமான சூழலை தரக் கூடும். அதனால் சிறிது கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் உங்களது வேலை அல்லது தொழிலில் ஒரு நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இதனால், இதுவரை நிலவி வந்த நிதி பிரச்னைகளிலில் இருந்து நீங்கள் மெதுவாக மீண்டு வருவீர்கள். உங்களது அணைத்து சோதனை நிறைந்த காலத்தை கடந்து வந்து விட்டீர்கள் என்றே சொல்லலாம். இதனால் நீங்கள் பல விசயங்களை உங்களது வாழ்க்கையில் கற்றுக் கொண்டு இருப்பீர்கள். இனி நீங்கள் சற்ற புன்னகைத்து ஒரு நல்ல பாதையை நோக்கி செல்ல வேண்டிய காலமாகும். இனி வரும் காலம் உங்களுக்கு அணைத்து வெற்றிகளையும் கொண்டு வந்து சேர்க்கும்.
Prev Topic
Next Topic