குரு பெயர்ச்சி (2017 - 2018) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

April 17, 2018 to Aug 06, 2018 கலவையான பலன்கள் (50 / 100)


இந்த காலகட்டத்தில் ஒரு எதிர்பாராத பின்னடைவு ஏற்படலாம். சில தடைகளையும் நீங்கள் எதிர்கொள்ள நேரலாம். எனினும் உங்களது உடல் நலம் நன்றாகு இருக்கும். ஆனால் வேலை சுமையின் காரணமாகவும் குடும்பத்தில் பொறுப்பு அதிகரிப்பதினாலும் மன அழுத்தம் ஏற்படலாம். உங்களது மனைவி / கணவனிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் எழலாம். அதனால் நீங்கள் சற்று மனமுடைந்து போகலாம். எனினும் உங்களது குடும்பத்தினர் உங்களது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
உங்களது குடும்பத்தினர் அவர்களிடம் உங்களை அதிக நேரம் செலவிட நிற்பந்திப்பார்கள். எனினும் நீங்கள் உங்களது வேலையில் முழு ஆர்வத்துடனும் ஈடுப்பாட்டுடனும் இருப்பீர்கள். மேலும் உங்களது வருமானத்தை உயர்த்தி கொள்ள பல வழிகளை யோசிப்பீர்கள். நீங்கள் மிக பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் உங்களது குடும்பத்தினரோடு அதிக நேரம் செலவிடவும் வேண்டும். நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால் அவருடன் நேரம் செலவிட முடியாமல் இருக்கும். ஏனென்றால் நீங்கள் உங்களது படிப்பிலும் உத்யோக உயர்விலும் அதிக கவனம் செலுத்துவீர்கள். நீண்ட தூர பயணம் செய்வதற்கு இது ஏற்ற காலம் இல்லை. அது உங்களை அதிகம் தனிமை படுத்தலாம்.
இந்த பெயர்ச்சியின் மூன்றாம் பாகத்தில் உங்களது வேலை சுமை அதிகரிக்கும். நீங்கள் அதனை சமாளிக்க முடியாமல் தினருவீர்கள், எனினும் உங்களது கடின உழைப்பிற்க்கான பலன் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். உங்களது கடின உழைப்பை பார்த்து உங்களது மேலாளரும் முதலாளியும் மகிழ்ச்சி அடைவார்கள். அதனால் இந்த காலகட்டத்தில் வேலை மாற்றம் செய்வது உத்தமம் இல்லை. ஏனென்றால் அது உங்களுக்கு தற்போது இருக்கும் உத்தியோகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தித்தர கூடும்.


தொழிலதிபர்கள் உங்களது தொழில் வளர்ச்சியில் மும்மரமாக இருப்பீர்கள். எடுத்துள்ள ப்ரோஜெக்ட்டை சரியான நேரத்தில் முடிப்பதற்காக புது வேலை ஆட்கலை நியமிப்பீர்கள். உங்களது போட்டியாளர்கள் உங்களுக்கு ஒரு சவாலாகவே இருப்பார்கள், எனினும் நீங்கள் உயர்ந்தே இருப்பீர்கள். மேலும் உங்களுக்கு பல புது ப்ரோஜெக்டுகளும் கிடைக்கும். உங்களது பண/ நிதி தேவைகள் குறையும். கடன் வாங்க வேண்டிய தேவை இருக்காது. மேலும் செலவுகளும் குறையும்.
தேவையற்ற ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். அது உங்களது சேமிப்பை பாதிக்கலாம். அவ்வாறு தொடர்ந்து செலவு செய்தால் அது உங்களது அணைத்து சேமிப்பையும் கரைத்து பின் கடன் வாங்க வேண்டிய சூழல் எலலாம். உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரத்து அதிகமாவதால் செலவுகளும் அதிகரிக்கலாம்.
நீண்ட காலம் பங்கு சந்தை வர்த்தகத்தில் இருப்பவர்கள் சந்தை நிலவரத்தை பார்த்து அதன் படி சிந்தித்து முதலீடு செய்வது உத்தமம். இல்லை என்றால் அது நட்டத்தில் முடியலாம். பங்கு சந்தையில் மேலும் புது முதலீடு செய்வதை தவிர்க்கவும். மாறாக நீங்கள் ரியல் ஈஸ்டடேட்டில் முதலீடு செய்யலாம்.





Prev Topic

Next Topic