![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியுரிமை பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியுரிமை |
பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியுரிமை
கடந்த 12 மாதங்களாக தொடர் தூர பயணம் உங்களை சங்கடங்களுக்கு ஆளாக்கியிருக்கும். எனினும் இப்பொழுது அனைத்தும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த காலமாக இந்த குரு பெயர்ச்சி உள்ளது. உங்களது முயற்சி எல்லாம் வெற்றியை தரும். எனினும் ராகு உங்களது ஜென்ம ராசியில் நிலவுவதால் நீங்கள் புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளவது அடுத்த ஒரு வருடத்திற்கு நல்ல பலன்களை தரும்.
உங்கள் உடல் ஆரோக்கியம் ஒரு நல்ல நிலையில் இருக்கும். இதனால் நீங்கள் உங்களது பயணத்தில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் மேற்கொள்வீர்கள். எனினும் பிரயாணம் காரணமாக உங்களுக்கு சிறு மன அழுத்தம் ஏற்படலாம். இது முக்கியமாக கடந்த சில வருடங்களாக நீங்கள் அனுபவித்த்து வந்த சோதனையால் இருக்கலாம். எனினும் உங்களது வாழ்க்கை இனி மேல்நோக்கி ஒரு நல்ல பாதையில் செல்லும் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.
விசா பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்திருந்தால் அது எளிதில் சரியாகி விடும். மேலும் நீங்கள் வெளி நாட்டரிக்கு நினைத்தபடி வேலை நிமித்தமாக செல்லலாம். மேலும் அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற இது ஏற்ற காலமாகும்.
Prev Topic
Next Topic