![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) வேலை / உத்யோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வேலை / உத்யோகம் |
வேலை / உத்யோகம்
உங்களது உத்தியோகத்திலும் முன்னேற்றத்திலும் இனி எந்த தடையும் இருக்காது. குருவும் சனியும் உங்களது ராசியில் நல்ல நிலையில் சஞ்சாரம் செய்வதால், நீங்கள் உங்களது வேளலையில் அதிகம் கவனம் செலுத்தி நற்பெயர் பெறுவீர்கள். கடந்த ஆண்டுகளில் நீங்கள் அடைந்து வந்த பின்னடைவுகள் தற்போது குறைந்து சில குறிப்பிட தக்க மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் நீங்கள் உங்களது உத்யோகத்தில் காண்பீர்கள். உங்களது வேலையில் நீங்கள் எதிர்ப்பார்த்ததை விட அதிக வெற்றியையும் வளர்ச்சியையும் காண்பீர்கள்.
இந்த குரு பெயர்ச்சி காலம் உங்களுக்கு குறிப்பிடதக்க வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தந்தாள் அதில் சந்தேகப் படுவதற்கு ஒன்றும் இல்லை. எனினும் ஒரே இரவில் அனைத்தும் நடந்து விடாது. நீங்கள் படிப் படியாக முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களது அலுவலகத்தில் இனி அரசியல் இருக்காது. உங்களது மேலாளர் மற்றும் மேல் அதிகாரிகள் உங்களது வேலையையும் கடின உழைப்பையும் கண்டு உங்களை அங்கீகரிப்பார்கள். அது மட்டும் இல்லாது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வையும் தருவார்கள். இந்த குரு பெயர்ச்சி காலகட்டத்தில் உங்களுக்கு நிச்சயம் பதவி உயர்வும் முன்னேற்றமும் உள்ளது என்பதில் சந்தேகம் வேண்டாம். குறிப்பாக இந்த குரு பெயர்ச்சி காலத்தின் கடைசி சில மாதங்கள் நீங்கள் கண்டிப்பாக நல்ல வளர்ச்சியை அடைந்திருப்பீர்கள்.
உங்களது உத்யோகம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஒரு சமமான சூழலை காண்பீர்கள். மேலும் வேலை தேடுபவர்களுக்கு வேளலையில் மாற்றங்களை எதிர் பார்ப்பவர்களுக்கும் இந்த குரு பெயர்ச்சி காலம் எதிர்ப் பார்த்த மாற்றங்களை தரும். புது வேலை வாய்ப்பு பெறுவதற்கு இந்த குரு பெயர்ச்சி காலம் தக்க சமயமாகும். புது வேலை அவ்வளவாக எதிர்ப் பார்த்தபடி இல்லை என்றாலும், நிச்சயம் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நீங்கள் உங்களது உத்யோகத்தில் ஒரு நல்ல வளர்ச்சியை காண்பீர்கள்.
மேலும் இடைநிறுத்தம் அல்லத எச்சரிக்கை / அறிவிப்பு போன்ற சூழலில் இருக்கிறீர்கள் என்றால் அந்த பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளியில் வந்து நல்லபடியாக வேலை பார்க்க ஆரம்பிப்பீர்கள். உங்களது தற்காலிக ஒப்பந்தம் இப்பொழுது நிரந்தரமாகும். அது மட்டும் இல்லாது, உங்களுக்கு ஊதிய உயர்வும் கிடைக்கும். இது உங்களது நிதி நிலையில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரும். மொத்தத்தில் அடுத்த ஒரு வருடத்திற்கு உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் நீங்கள் அனுவபித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் இது நாள் வரை காத்திருந்த பலன்களையும் வெற்றியையும் இனி அடைவீர்கள். முக்கியமாக நவம்பர் 2018 மேல் உங்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.
Prev Topic
Next Topic