குரு பெயர்ச்சி (2017 - 2018) தொழில் மற்றும் வேற்று வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

தொழில் மற்றும் வேற்று வருமானம்


கடந்த ஒரு வருடமாக நீங்கள் உங்களது தொழில் அதிர்ஷ்ட்டம் நிறைந்த சூழலை சந்தித்து வந்திருப்பீர்கள். கடன் ஏதும் பெரிதாக இல்லாததால் உங்களது லாபமும் பண வரத்தும் அதிகமாக இருந்திருக்கும். எனினும் தற்போது முக்கிய கிரகங்களான குரு சனி, ராகு மற்றும் கேதுவின் நிலைகள் மாற உள்ளதால், உங்களது தொழிலில் நீங்கள் பெரிதாக வளர்ச்சியை காண முடியாது. எனினும் உங்களது வாழ்க்கை துணைவர் பெயரை சேர்த்து தொழில் தொடங்குவது நல்லது. இது பெரும் அளவு ஏற்பட உள்ள நட்டத்தை தடுக்கும்.
மேலும் நிகழவிருக்கும் ஏழரை சனி உங்களுக்கு பல சோதனைகளை தரும். இது உங்களுக்கு ஒரு சோதனை நிறைந்த காலமாகவே இருக்கும். மேலும் உங்களது மகா தசை நன்றாக இல்லை என்றால், உங்களது தொழில் மற்றும் லாபத்தில் சில பிரச்சனைகள் அல்லது பின்னடைவுகள் ஏற்படலாம்.


உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து செயல் படுவது ஓரளவுக்கு ஆறுதலாக இருக்கும். நீங்கள் போட்டியாளர்களின் தாக்கத்தால் உங்களது நீண்ட கால வாடிக்கையாளர்களை இழக்க நேரலாம். இது உங்களது பண வரத்தை பெரிதாக பாதிக்க கூடும். மேலும் சில நிதி பிரச்சனைகளையும் சந்திக்க நேரலாம். வருமான வரி, மற்றும் சில சட்ட சிக்கல்களையும் நீங்கள் எதிர் கொள்ள நேரலாம்.
சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிஷன் ஏஜெண்டுகள், மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் ஒரு கடினமான சூழலை கடக்க வேண்டியதிருக்கும். எனினும் உங்களது செல்வாக்கை நீங்கள் தக்க வைத்து கொள்வீர்கள். எனினும் உங்களது வருமானம் பெரிதாக எதிர் பார்த்த படி இருக்காது.



Prev Topic

Next Topic