![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கல்வி |
கல்வி
கடந்த ஆண்டு மாணவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த காலமாகவே இருந்திருக்கும். நீங்கள் பரிட்சையில் நல்ல மதிப்பென்கள் பெற்றிருப்பீர்கள். மேலும் நீங்கள் விரும்பிய பள்ளி அல்லது கல்லூரியில் உங்களுக்கு சேர்க்கை கிடைத்திருக்கும். உங்களது குடுமபத்திற்கு மே 2017 முதல் நல்ல பெயரை பெற்று தந்திருப்பீர்கள்.
கல்வியில் சிறந்து விளங்குவதற்கு குருவின் அருள் மிக அவசியம். எனினும் தற்போது குரு 10ஆம் வீட்டிற்கு பெயர்வதால் சற்று குறைந்தே அவரது துணை உங்களுக்கு இருக்கும். உங்களது படிப்பில் நீங்கள் அதிக தடைகளை சந்திக்க நேரலாம். உங்களது குடும்ப சூழல் உங்களுக்கு படிப்பதற்கு உறுதுணையாக இருக்காது. நீங்கள் உங்களது படிப்பில் ஆர்வத்தை இழப்பீர்கள். மேலும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் திணறுவீர்கள்.
நீங்கள் நல்ல மதிப்பென்கள் பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் பெரிதாக இருக்காது எனினும் கடின உழைப்பால் மட்டுமே நீங்கள் நல்ல மதிப்பென்கள் பெற முடியும். உங்களது நண்பர்களிடத்தில் தேவை அற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அது உங்களது நட்பை காக்க உதவும். மேலும் நீங்கள் விளையாட்டில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால் வெற்றி பெறுவது சற்று கடினமே.
Prev Topic
Next Topic