![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
கடந்த சில மாதங்கள் உங்களது குடும்பத்தினரோடு நீங்கள் நல்ல உறவு நிலையில் இருந்திருப்பீர்கள். குரு உங்களது 9ஆம் வீட்டில் இருந்து உங்களுக்கு பல நன்மைகளை செய்திருப்பார். முக்கியமாக ஜூன் 2017 முதல் உங்களது குடும்ப வாழ்க்கை நல்லபடியாக இருந்திருக்கும். நீங்கள் உங்களது குடும்பத்தில் திருமணம், புது மனை புகுதல், குழந்தை பேரு போன்ற பல சுப காரியங்களை நிகழ்த்தி இருந்திருப்பீர்கள்.
இந்த 2017 முழுவதும் நீங்கள் நல்ல சூழலை உங்களது குடும்பத்தில் காண்பீர்கள். எனினும் 2018 உங்களது வீட்டில் சுப காரியம் செய்ய வேண்டுமென்றால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செயல் படுவது உத்தமம்.
குரு உங்களது 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களது குடும்பத்தில் நிலவி வந்த நல்ல சூழலை பாதிக்க கூடும். மேலும் உங்களுக்கு ஏழரை சனி வரும் அக்டோபர் 25, 2017 முதல் ஆரம்பிக்க உள்ளதால் நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். உங்களது வாழ்க்கை துணைவர் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு சில கருது வேறுபாடு ஏற்படலாம். மேலும் ராகு 7ஆம் வீடான களத்ர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த சூழலை நீங்கள் ஏழரை சனியின் முதல் ஆண்டு ஓரளவுக்கு சமாளிப்பீர்கள்.
உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் வேலை நிமித்தமாக வேறு இடத்திற்கு செல்ல வேண்டியதிருக்கும். இது உங்களது குடும்பத்தினரை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்க செய்யும். நீங்கள் பல நாள் தூக்கம் இல்லாத இரவுகளை கழிப்பீர்கள். பெரிதாக ஏதும் பின்னடைவுகள் உங்களது குடும்ப உறவுகளில் ஏற்படாது. எனினும் குரு மற்றும் சனியின் அதிர்ஷ்டம் நிறைந்த காலகட்டத்தை நீங்கள் கடந்து விட்டதால் மன அளவிலான சில தாக்கங்களை நீங்கள் சந்திக்க நேரலாம்.
Prev Topic
Next Topic