குரு பெயர்ச்சி (2017 - 2018) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

நிதி / பணம்


ஜூன் 2017 முதல் உங்களுக்கு பண மழை பெய்திருக்கும். ஆனால் அது வரும் நவம்பர் 2017 ஏழரை சனியின் காரணத்தால் குறைய அல்லது நிற்க கூடும். நீங்கள் செப்டம்பர் 2017 உங்களது பெரும்பாலான கடன்களில் இருந்து வெளி வருவீர்கள். எனினும் நீங்கள் கடன்களில் இனி வரும் காலங்களில் சிக்காமல் தப்ப உங்களது நிதியையும் மற்றும் வருமானத்தையும் திட்டமிடுவது நல்லது. இது உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். மேலும் வரும் நவம்பர் 2017 மேல் நீங்கள் பெரிதாக எந்த ஒரு முன்னேற்றத்தையும் உங்களது நிதி நிலையில் காண முடியாது. உங்களுடைய செலவுகள் அதிகரிக்கும். அது உங்களது சேமிப்பை வெகுவாக குறைக்கும். நீங்கள் உங்களது செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்வது நல்லது. மேலும் பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கடன் வாங்க ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். ஏனென்றால் அந்த கடனுக்கு நீங்கள் பொறுப்ப்பாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்.
மேலும் தேவைக்கு அதிகமாக கிரெடிட் கார்டு வைத்திருந்தாள் அதனை அடைத்து விடுங்கள். அது உங்களை அதிகம் செலவு செய்ய தூண்டலாம் . பிரயாணம் செல்வதில்,ஆடம்பர பொருட்கள் வாங்குவது போன்ற வற்றில் உங்களது செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் வீடு வாடகைக்கு விட்டிருந்தாள் அதனால் செலவுகள் அதிகரிக்கலாம். இல்லை என்றால் அது வாடகைக்கு விட முடியாமல் காலியாக இருக்கலாம். கடந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டங்கள் அல்லது நல்ல விசயங்கள் இந்த பெயர்ச்சி காலத்திலும் தொடரும். எனினும் நீங்கள் பணம் மற்றும் நிதி ரீதியாக எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு முன் சிந்தித்து செயல் படுவது நல்லது.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic