![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | நான்காம் பாகம் |
Jul 10, 2018 to Oct 11, 2018 வீழ்ச்சி (35 / 100)
நிகழும் இந்த குரு பெயர்ச்சின் மிக மோசமான காலகட்டம் இந்த நான்காம் பாகம் தான். நீங்கள் இந்த காலகட்டத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். எந்த முயற்சி அல்லது வேலை செய்தாலும் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல் படவும். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக மன அழுத்தத்துடனும் பதற்றத்துடனும் காணப் படுவீர்கள். அதனால் நீங்கள் மிக பொறுமையோடு இருக்க வேண்டும். தேவை பட்டால் ஒரு நல்ல ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செயல் படுவது சில சிக்கல்கள் அல்லது பிரச்சனைகளை தவிர்க்க உதவும்.
உங்களது மனைவி / கணவனிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். இது உங்களை வருத்தத்திற்கு உள்ளாக்கலாம். நீங்கள் உங்களது நெருங்கிய உறவினர்களுடன் சில சண்டை அல்லது பிரச்சனையில் இடுபடக் கூடும். சரியான தூக்கம் இல்லாமல் இரவுகளில் த்விப்பீர்கள். இந்த காலகட்டத்தில் வீட்டில் சுப காரியம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு சவால் நிறைந்த காலமாகும். சிலர் உங்களது உத்தியோகத்தையும் இழக்க நேரலாம். எனினும் இந்த காலகட்டத்தில் நீங்கள் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வை எதிர் பார்க்க முடியாது. உங்களது வளர்ச்சியில் சிறு பின்னடைவுகள் ஏற்படலாம். புதிதாக வேலை தேடுவதற்கு இது ஏற்ற காலகட்டம் இல்லை. நீங்கள் உங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொள்வதற்காக அலுவலகத்தில் அனுசரித்து போக வேண்டியுள்ளது.
தொழிலதிபர்கள் எதிர் பாராத பின்னடைவுகளை எதிர் கொள்ளக் கூடும். உங்களது இந்த காலகட்டத்தில் புதிதாக ப்ரோஜெக்ட்டுகள் கிடைப்பது கடினமே. மேலும் தற்போது இருக்கும் ப்ரோஜெகட்டுகளும் ரத்தாக வாய்ப்புள்ளது. போதுமான அளவிற்கு உங்களுக்கு பண வரத்து இருக்காது. அதனால் நீங்கள் நிதி நிலையை சமாளிக்க கடினமாக போராட வேண்டிய சூழல் எழலாம்.
தேவையற்ற பயணங்களால் உங்களது செலவுகள் அதிகரிக்கும். மேலும் மருத்துவ செலவுகள் மற்றும் எதிர்பாராத அவசர செலவுகள் அதிகரிக்கும். உங்களது கிரெடிட் கார்டின் மதிப்பீடு குறைவதால், அதனை எதிர் பார்த்த படி உபயோகிக்க முடியாது. அதனால் திட்டமிட்டு செலவழிப்பது நல்லது. அது உங்களை தேவை இல்லாமல் கடன் வாங்குவதில் இருந்து காக்கும். வர்த்தகர்களுக்கு இது சாதகமான காலகட்டம் இல்லை. உங்களது முதலீடுகள் எதிர் பார்த்த லாபத்தை கொடுக்காது. எனினும் குரு வரும் அக்டோபர் 11, 2018 உங்களது ராசியின் 11ஆம் வீட்டிற்கு பெயருவதால் உங்களது உத்தியோகத்தில் நல்ல சூழல் ஏற்படும். மேலும் உங்களது நிதி நிலையில் வளர்ச்சியை காணலாம்.
Prev Topic
Next Topic