![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
கடந்த 12 மாதங்களாக குரு உங்களது பாக்ய ஸ்தானத்தில் இருந்ததால் நீங்கள் பல அதிர்ஷ்டங்களையும் நன்மைகளையும் கண்டிருப்பீர்கள். மேலும் சனியும் நல்ல இடத்தில சஞ்சரித்ததால் நீங்கள் பல வெற்றிகளை கண்டிருப்பீர்கள். எனினும் கடந்த பிப்ரவரி 2017 முதல் 4 மாதங்களுக்கு நீங்கள் சில பின்னடைவுகளை சந்தித்திருந்திருப்பீர்கள். எனினும் அதில் இருந்து மீண்டு வந்திருப்பீர்கள். மேலும் மே 26 2017 முதல் செப்டம்பர் 11, 2017 வரை நீங்கள் நல்ல சூழலையும் அதிர்ஷ்டங்களையும் எந்த ஒரு பின்னடைவும் இன்றி அடைந்திருப்பீர்கள்.
தற்போது நிகழும் குரு பெயர்ச்சியில் குரு உங்களது 10ஆம் வீட்டிற்கு பெயர்வது எந்த பாதிப்பையும் உங்களுக்கு தராது. எனினும், உங்களது வளர்ச்சியில் அவர் எதிர் பார்த்த உறுதுணையயை தருவது சற்று சந்தேகமே. மேலும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் ஜென்ம கேதுவும் ராகுவும் உங்களுக்கு பின்னடைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் சனி உங்களது 12ஆம் வீட்டிற்கு பெயர்வது உங்களுக்கு வரும் அக்டோபர் 25, 2017 முதல் ஏழரை சனி ஆரம்பம் ஆவதை காட்டுகின்றது. இது உங்களது வளர்ச்சியை மிகவும் பாதிக்கும்.
ஏழரை சனி 7.5 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதனால் அதிக பலன்களை மிக விரைவில் எதிர் பார்ப்பது கடினமே. மேலும் கிரகங்களின் நிலைப்பாடுகளும் சரியாக இல்லை. இருப்பினும் அவர்கள் உங்களது வாழ்க்கையில் பெரிதாக பாதிப்புகளையும் பின்னடைவுகளை ஏற்படுத்த மாட்டார்கள். உங்களது வாழ்க்கையில் நல்ல விசயங்களையும் நீங்கள் சந்திப்பீர்கள். எனினும் தற்போதைய நிலையில் இருந்து பெரிதாக நீங்கள் முன்னேறுவது அல்லது அடுத்த கட்டத்திற்கு செல்வது சற்று கடினமே.
Prev Topic
Next Topic