![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம், வெளி நாட்டு பயணம் மற்றும் குடியேற்றம்
குரு உங்களது 9ஆம் வீட்டில் இருந்து உங்களுக்கு கடந்த ஒரு ஆண்டு காலம் நல்ல சூழலை கொடுத்திருப்பார். நீங்கள் பயணம் மற்றும் சுற்றுலா சென்றுருப்பீர்கள். எனினும் தற்போது ஏழரை சனி தொடங்க இருப்பதாலும் மற்றும் குரு உங்களது 10ஆம் வீட்டிற்கு பெயர இருப்பதாலும் நீங்கள் எதிர் பார்த்த படி நன்மைகள் நடப்பதற்கு சற்று தாமதம் ஆகலாம். அல்லது நடக்காமலும் போகலாம். மேலும் உங்களது பயணத்தால் தேவை அற்ற செலவுகள் அதிகரிக்கலாம். நீங்கள் உறக்கம் கேட்டு உடல் நலம் குறையவும் வாய்ப்புள்ளது. முக்கியமாக தொழில் புரிவோர்கள் தங்களது தொழில் சம்பந்தமான பயணத்தில் எதிர் பார்த்த வெற்றி கிடைப்பது சற்று சந்தேகமே.
நீங்கள் செப்டம்பர் 2017 அணைத்து விசா அல்லது குடியுரிமை குறித்த சிக்கல்களில் இருந்து வெளி வந்திருப்பீர்கள். எனினும் தற்போது நிகழும் குரு மற்றும் சனி பெயர்ச்சியால் உங்களுக்கு எதிர் பார்த்த படி குடியுரிமை மற்றும் விசா கிடைப்பதில் சிக்கல்கள் நேரலாம். கிறீன் கார்டு பெறுவதில் தாமதம் ஏற்படலாம். மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது கனடா போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு தாமதம் ஆகலாம். எனினும் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து ஜோதிடரிடம் இருந்து ஆலோசனை பெற்று அதன் படி நடப்பது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic