![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) தொழில் மற்றும் வேற்று வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | தொழில் மற்றும் வேற்று வருமானம் |
தொழில் மற்றும் வேற்று வருமானம்
பிப்ரவரி/ மார்ச் 2017 சில பின்னடைவுகளை நீங்கள் உங்களது தொழிலில் சந்தித்திருந்தாலும், ஜூலை 2017 ராகு மற்றும் சனியின் பலத்தால் அதில் இருந்து மீண்டு வந்திருப்பீர்கள். இப்பொழுது குரு 5ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் பல மடங்கு அதிர்ஷ்டம் உங்களுக்கு வரப்போகிறது. வரும் செப்டம்பர் 11, 2017 நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் உங்களது தொழிலில் நீங்கள் நல்ல வளர்ச்சியையும் வெற்றியையும் காண்பீர்கள். நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணருவீர்கள்.
மேலும் நல்ல நீண்டகால ப்ரொஜெக்ட்டுகளும் உங்களுக்கு கிடைக்கும். இதனால் உங்களது வருமானமும் பல மடங்கு அதிகரிக்கும். மறைமுக எதிரிகள் பலம் இழப்பார்கள். மேலும் போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். அடுத்த ஒரு வருடத்துக்கு உங்களது தொழிலில் நல்ல வளர்ச்சியையும் லாபத்தையும் நீங்கள் காண்பீர்கள். மேலும் நீங்கள் உங்களது தொழிலை விரிவு படுத்தவும் இது ஏற்ற காலமாகும்.
நீங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி எதிர்பார்கின்றீர்கள் என்றால் அது தாமதம் இன்றி கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் நல்ல பலனை தரும். ஆனால், வரவிருக்கும்ந சனி பெயர்ச்சி அவ்வளவாக நல்ல நிலையில் இல்லாததால் நீங்கள் கூட்டு தொழிலில் ஈடுபட எண்ணினால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செயல் படுவது உத்தமம்.
குருவின் பலம் அதிகம் உள்ளதால் சுய தொழில் செய்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி காலம் வெற்றிகரமாகவே உள்ளது. பெரும் புகழும் உங்களை தேடி வரும். மேலும் உங்களது நிதி நிலையும் உயரும். ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் மற்றும் கமிஷன் ஏஜெண்டுகள் நல்ல லாபத்தை காண்பீர்கள். எனினும் உங்களது செல்வாக்கை தக்கவைத்து கொள்வது மிக அவசியம். அடுத்த ஒரு வருடத்திற்குள் நீங்கள் உங்களது தொழிலில் நன்றாக நிலை பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic