குரு பெயர்ச்சி (2017 - 2018) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

கல்வி


சனி மற்றும் ராகு கடந்த ஒரு வருடமாக உங்களது படிப்பில் நல்ல கவனம் செலுத்த உதவி இருப்பார்கள் . நீங்கள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தி படிப்பீர்கள். நல்ல சிந்தனைகளோடும் புத்திக் கூர்மையோடும் இருப்பீர்கள். இதை தொடர்ந்து நிகழவிருக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு பல நல்ல பலன்களை தர உள்ளது. நீங்கள் படிப்பிலும் விளையாட்டிலும் பரிசுகள் பெற்று வெற்றி பெறுவீர்கள். மேலும் பரிச்சையில் நல்ல மதிப்பெண்கள் கிடைத்து விரும்பிய மற்றும் பெரிய கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் உங்களுக்கு சேர்க்கை கிடைக்கும்.
நண்பர்களும் குடும்பத்தினரும் உங்களது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் நல்ல உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் முதுநிலை மற்றும் Ph.D படிக்கும் மாணவராக இருந்தால் உங்களது ஆய்வறிக்கை ஒப்புதல் பெற்று நீங்கள் பட்டம் பெறுவீர்கள். உங்களது கல்லூரி வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.



Prev Topic

Next Topic