![]() | குரு பெயர்ச்சி (2017 - 2018) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | முதல் பாகம் |
Sep 11, 2017 to Oct 25, 2017 பொற்காலம் (90 / 100)
இந்த குரு பெயச்சி காலக்கட்டத்தின் முதல் பாகம் உங்களுக்கு ஒரு பொற்காலமாகவே இருக்கும்.
சனி பகவான் முழு அருளோடு உங்களுக்கு பல நன்மைகளையும் அதிர்ஷ்டங்களையும் தரவிருக்கிறார். மேலும் குரு அதனை பல மடங்கு பெருக்குவார். உங்கள் உடல் நலம் நல்ல முன்னேற்றத்தை காணும். நீங்கள் ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். மேலும் உங்களுக்கு நல்ல உறக்கமும் வரும். உங்களது வாழ்க்கையின் மீது உங்களுக்கு நம்பிக்கை வரும். உங்களது குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள். அது உங்களை மகிழ்விக்கும். உங்களது குடும்ப சூழல் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். மேலும் வீட்டில் சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற காலகட்டமாகும்.
உங்களது சொந்த வாழ்க்கை மிக மகிழ்சிகரமாக இருக்கும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு தக்க வரன் கிடைத்து திருமணம் விரைவில் நடக்கும். திருமணம் செய்வதற்கான யோகம் உங்களுக்கு நிறைய உள்ளது. மேலும் நீங்கள் உங்களது மனைவி/ கனவனோடு உல்லாச பயணம் மேற்கொள்ள இது ஏற்ற காலகட்டமாகும். நீண்ட நாட்கள் குழந்தை பேருக்காக காத்திருந்த திருமணம் ஆனவர்கள் தற்போது அந்த பாக்கியம் பெறுவார்கள். திருமணம் ஆகாதவர்கள் காதல் வயப் பட வாய்ப்புள்ளது. நீங்கள் விரும்பவரிடம் உங்களது விருப்பத்தை குரலாம்.
உங்களது உத்தியோகத்தில் நீங்கள் சிறந்து செயல் படுவீர்கள். உங்களது உத்தியோகத்தில் நீங்கள் நல்ல வளர்ச்சியை காண்பீர்கள். மேலும் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் தாமதம் இன்றி கிடைக்கும். நீங்கள் புதிதாக வேலை தேடுகுரீர்கள் என்றால் பெரிய கம்பனிகளில் உங்களுக்கு எதிர் பார்த்த வேலை கிடைப்பதற்கு இந்த குரு பெயர்ச்சி காலம் சாதகமாக உள்ளது. உங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறும் காலம் இது.
தொழிலதிபர்கள் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள். உங்களுக்கு பணம் ஒரு குறையாகவே இருக்காது. உங்களது எந்த விதமான பண தேவைகளையும் நீங்கள் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மேலும் உங்களது தொழிலும் வளர்ச்சி பெரும். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிஷன் ஏஜெண்டுகளுக்கு இது ஒரு பொற்காலம் என்றே கூறலாம். பயணம் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. உங்களுக்கு விசா மற்றும் குடியுரிமை எளிதாக கிடைக்கும்.
நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த கடனில் இருந்து நீங்கள் வெளி வருவீர்கள். அனைத்து கடன்களையும் அடைத்து போதுமான பணமும் உங்களிடத்தில் கையிருப்பில் இரும்ம்கும். இது உங்களை மிகவும் மகிழ்விக்கும். ரியல் எஸ்டேட் சம்பந்தமான எந்த ஒரு முதலீடும் உங்களுக்கு லாபகரமாக இருக்கும். மேலும் ஊக வர்த்தகம் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். நீங்கள் அதில் பெரிய அளவில் லாபத்தை காணலாம். உங்களது மகா தசை உங்களுக்கு சாதகமாக இருந்தால் நீங்கள் கோட்டீச்வரராகவும் வாய்ப்புள்ளது. உங்களது ஜென்ம ஜாதகம் பலமாக இருந்தால் உங்களுக்கு அதிர்ஷ்ட சீட்டு போன்றவையும் நல்ல லாபத்தை கொண்டு வரும். நீங்கள் திரை நக்ஷத்திரமாக இருந்தால் நிறைய வாய்புகள் கிடைத்த வெற்றியோடு பெரும் புகழும் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic