குரு பெயர்ச்சி (2017 - 2018) உடல் நலம் / ஆரோக்கியம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

உடல் நலம் / ஆரோக்கியம்


பிப்ரவரி 2017 இருந்து கடந்த சில மாதங்களாகவே நீங்கள் மன அழுத்தத்துடனும் உடல் உபாதைகளுடனும் இருந்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் விரைவில் குணமடைந்திருப்பீர்கள். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள்.
எனினும் சனி 7ஆம் வீட்டிற்கு செல்லும் காலகட்டத்தில் நீங்கள் சில சிறிய உடல் நல பிரச்சனையால் அவதிப்படக் கூடும். முதுகு வலி, வயிற்று வலி, பித்தப்பை மற்றும் கண்களில் சில உபாதைகள் வரக் கூடும். எனினும் தக்க சிகிச்சை மற்றும் மருந்து கிடைத்து நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். எந்த ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனை வந்தாலும் குருவின் அருளால் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்.


நீங்கள் உங்களது பெற்றோர்கள் மற்றும் மனைவி/ கணவனது ஆரோக்கியத்தில் சிறுது கவனம் செலுத்த வேண்டும். தினமும் லலிதா சஹஸ்ர நாமம் கேட்டு வருவதால் உடல் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம்.


Prev Topic

Next Topic