குரு பெயர்ச்சி (2017 - 2018) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

Oct 25, 2017 to Mar 09, 2018 நல்ல முன்னேற்றம் (70 / 100)


வரும் அக்டோபர் 25, 2017 அன்று சனி பகவான் உங்களது 7ஆம் வீடிற்கு பெயருவதால் அவரின் உறுதுணை சற்று குறையலாம். அனால் அது உங்களது தொழில் / உத்தியோக வளர்ச்சியையும் நிதி/ வருமானத்தையும் பாதிக்காது. உங்களது குடும்பம் / சொந்தம் நல்ல நிலையில் இருக்கும். எனினும் நீங்கள் உங்களது உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். எனினும் குருவின் பலத்தால் உங்களது உடலில் ஏற்படும் பிரச்சனைகள் கட்டுப்பாடிர்க்குள் இருக்கும். அதனால் பயப்பட ஒன்றும் இல்லை.
உங்களுக்கு ஏற்ற வரனை பார்த்து திருமணம் செய்து கொள்வதற்கு இது ஏற்ற காலமாகும். திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். மேலும் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பிறப்பதினால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களது வீட்டில் பல சுப காரியங்கள் செய்து நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். எனினும் நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால், நல்ல துனை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் வேண்டும். சனி உங்களது ஜென்ம ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால், உங்களது அந்தஸ்த்துக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுப்பதில் சற்று சிக்கல் நிகழும். அனினும் பெற்றோர்களால் நிச்சயிக்க பட்ட திருமணம் கண்டிப்பாக ஜாதக பொருத்தம் பார்த்தே நடக்கும்.
கல்லூரி முடித்து வேலை தேடுபவர்களுக்கு பெரிய அலுவலகத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். நீங்கள் சுமுகமாக நேர்காணல் மற்றும் அனைத்து கட்டங்களிலும் தேர்ச்சி பெற்று வேலையில் சேருவீர்கள். உங்களது வேலை சுமையை எளிதாக சமாளிப்பீர்கள். பதற்றம் இன்றி வேலை பார்ப்பீர்கள். மேலும் உங்களது அலுவகத்தில் எந்த ஒரு சிக்கலும் இன்றி நீங்கள் சீராக பனி புரிவீர்கள். உங்களது முதலாளியும், மேலாளரும் மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களும் உங்களை பாராட்டுவார்கள். அதனால் சிலர் உங்களை பார்த்து, உங்களது வெற்றியையும் வளர்ச்சியையும் பார்த்து பொறாமை படலாம்.


உங்களது குடும்பத்தினரோடு உல்லாச பயணம் செல்ல இது ஏற்ற காலமாகும். தொழிலதிபர்கள் நல்ல வளச்சியையும் லாபத்தையும் காண்பார்கள். தொழிலில் உங்களது அதிர்ஷ்ட்டத்தை சோதிக்க இது தக்க சமயமாகும். நீங்கள் நிச்சயம் வெற்றி பெருவீர்கள். சுய தொழில் புரிவோர்க்கும் கமிஷன் எஜென்ட்டுகளுக்கும் நல்ல வெகுமதிகள் கிடைக்கும்.
நீங்கள் உங்களது அணைத்து கடன்களையும் அடைத்து நிம்மதியான சூழலை காண்பீர்கள். மேலும் உங்களிடத்தில் போதுமான அளவு பணம் இருக்கும். உங்களது சேமிப்பும் அதிகரிக்கும். உங்களது செலவுகள் கட்டுப்பாட்டிர்க்குள் வரும். உங்களது வருமானம் உயரும். புது வீடு வாங்க இது ஏற்ற காலமாகும் மேலும் வீடு வாங்க வங்கியில் இருந்து நீங்கள் எதிர் பார்த்த கடன் ஒப்புதல் பெரும்.
நீண்ட காலமாக வர்த்தகத்தில் முதலீடு செய்தவர்கள் மற்றும் வர்த்தகர்கள் நல்ல லாபத்தை காணலாம். நாள் வர்த்தகம் மற்றும் ஊக வர்த்தகம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. குருவின் பலத்தால் நீங்கள நல்ல லாபத்தை காணலாம். திரை நக்ஷத்திரங்கள் தொடர்ந்து வெற்றியை காண்பீர்கள்.




Prev Topic

Next Topic